ஸ்ரீவில்லிபுத்தூர்: பசுமை மாறாக்காடுகள், சோலைக்காடுகளில் வாழும் சிங்க
வால்குரங்குகள், தங்களுக்குள் எல்கை வகுத்து வாழும் தன்மை கொண்டது.முகத்தில் சிங்கத்தின் பிடரி போன்ற வெளிர் நிறத்தில் முடிகளும்,
சிங்கத்தின் வால் போல்,இதன் வால் பகுதியும் இருப்பதால், சிங்கவால் குரங்கு
என அழைக்கப்படும் இதற்கு, சிங்காளம் எனும் மற்றறொரு பெயரும் உண்டு.
மினுமினுப்பான அடர் கருப்பு நிறத்தில் முடிகளை கொண்ட சிங்கவால் குரங்குகள்,
தலை முதல் வால் வரை 45 செ.மீ., முதல் 60 செ.மீ.,வரை நீளம் கொண்டது. இதன்
எடை 3முதல் 10 கிலோ வரை காணப்படும். வால் பகுதியானது 25 செ.மீ., நீளத்தில்
உள்ளது. வாலின் நுனிப்பகுதியில் கொத்தாக முடிகளை கொண்ட குரங்குகளில் , ஆண்
குரங்கிற்கு அதிகமாகவும், பெண்ணிற்கு குறைவாக உள்ளன. பெரும்பாலான
நேரங்களில் மரங்களின் உயர்ந்த கிளைகளில் காணப்படும் சிங்கவால்
குரங்குகள்,எப்போதும் சுறுசுறுப்பாகவே காணப்படும். இவைகள் எப்போதுமே
10முதல் 20 குரங்குகளுடன் கூட்டமாகவே வளர்கின்றன. தங்களுக்கென எல்கையை
வகுத்து கொள்ளும் இவைகள் , எல்கைக்குள் வேறு குரங்குகள் வந்தால் எதிர்த்து
சண்டை போடும் குணம் கொண்டது. இதன் கர்ப்பகாலம் ஆறு மாதமாகும். குட்டியாக
பிறந்து ஒரு ஆண்டு வரை தாயின் அரவணைப்பில் வாழும் இவைகளின் ஆயுள் காலம், 20
முதல் 25 ஆண்டுகளாகும். பசுமை மாறாக்காடுகள், சோலைக்காடுகளில் மட்டுமே
வாழும் சிங்க வால்குரங்குகள், பழங்கள், பூ, மொட்டுக்கள், வெடிப்பலா
போன்றவைகளை விரும்பி உண்ணும் . களக்காடு, தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர்,
வால்பாறை, கேரளா உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிகம்
காணப்படுகின்றன.