| ADDED : ஆக 16, 2011 11:57 PM
ராஜபாளையம் : ராஜபாளையம் புதிய பஸ்ஸ்டாண்ட் அருகே ரயில்வே கீழ்பாலத்தில்
தேங்கி இருந்த கழிவுதண்ணீர் தினமலர் செய்தி எதிரொலியால் வெளியேற்றப்பட்டது.
நிரந்த தீர்வு காண அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.ராஜபாளையம்
நகராட்சி 39 வார்டில் உள்ளது ஐ.என்.டி.யு.சி.,நகர். இப்பகுதி நலசங்க
செயல்பாடுகள் குறித்து குடியிருப்போர் குரல் பகுதியில் தினமலர் இதழில்
ஆக.12ல் செய்தி வெளியானது. நகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள், சுத்தம்
செய்து கழிவு தண்ணீர் தேங்காமல் இருக்க தற்காலிக பணிகளை செய்தனர். தற்போது
தண்ணீர் தேங்காமல் அருகே இருந்த வாறுகாலுக்கு செல்கிறது. நிரந்தர தீர்வாக
இப்பகுதியில் வாறுகால் அமைத்து, கழிவுதண்ணீரை வெளியேற்றவேண்டும் என
ஐ.என்.டி.யு.சி., நகர் மற்றும் சுற்றுபகுதி மக்கள் கோரிக்கை விடுத்து
உள்ளனர். இது குறித்து நகராட்சி கமிஷனர் நடராஜன் கூறுகையில், ''அந்த
பகுதியை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.சத்திரப்பட்டி ரோட்டில் மேல்நிலை பள்ளிகள், தனியார் மில்கள்,பாலிடெக்னிக்
உள்ளன. ராஜபாளையத்தை சேர்ந்தவர்கள் சத்திரப்பட்டி ரோடு வழியாக தான் கல்வி
நிறுவனங்கள் மற்றும் மில்களுக்கு செல்ல வேண்டும். இந்த ரோட்டில் உள்ள
ரயில்வே கேட் அடைத்தால், ரயில்வே கீழ்பாலம் வழியாக தான் இவர்கள்
செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. இந்த பாலத்தில் கழிவுதண்ணீர் தேங்குவதால்
பலர் கீழே விழுகின்றனர். பல கோடி ரூபாய் வருமானம் உள்ள நகராட்சி, இதற்கென
நிதி ஒதுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்