மேலும் செய்திகள்
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
13 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
13 hour(s) ago
ஸ்ரீவில்லிபுத்தூர் : பிள்ளையார்குளம் ஊராட்சியில் குழாய் பழுதால் குடிநீர் கிடைக்காமல் பெருமாள்தேவன் பட்டி கிராமத்தினர் சிரமமடைந்து வருகின்றனர்.பிள்ளையார்குளம் ஊராட்சிக்குட்பட்டது பெருமாள்தேவன்பட்டி. இப்பகுதிக்கு ஊராட்சி சார்பில் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள துலுக்கன்குளம் கண்மாயில் ஆழ்துளை கிணறு போட்டு அங்கிருந்து மோட்டார் மூலமக் பம்ப் செய்து மேல்நிலை தொட்டிகளில் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் துலுக்கன்குளத்தில் ஆழ்துளை கிணறு அருகே குடிநீர் வரும் குழாய் பழுதடைந்தது. குடிநீர் சப்ளை முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஆனால் சப்ளை நிறுத்தி ஐந்து நாள்களாகியும் இன்று வரை சரி செய்யப்படவில்லை. இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளில் ஆறில் மூன்று பழுதாகியுள்ளது. மேலும் பிளாஸ்டிக் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணற்றிலும் சரிவர தண்ணீர் வராததால் மக்கள் தண்ணீருக்காக திண்டாடி வருகின்றனர்.
13 hour(s) ago
13 hour(s) ago