மேலும் செய்திகள்
வ.புதுப்பட்டி பேரூராட்சி 11 வது வார்டு விசிட்
30-Oct-2024
வத்திராயிருப்பு : வ.புதுப்பட்டி பேரூராட்சி 12வது வார்டில் குறுகிய ரோட்டால் விபத்து அபாயம், வாறுகால், ஓடையை கடக்க பாலம் இல்லாததால் சிரமம், சேதமடைந்து காணப்படும் தெரு ரோடு போன்ற குறைபாடுகள் காணப்படுகிறது.கிராம முன்சீப் தெரு, பிள்ளையார் கோவில் தெற்கு தெரு, வ.உ.சி.தெரு, கான்சாபுரம் மெயின் ரோடு ஆகிய பகுதிகள் கொண்டது இந்த வார்டு.இதில் கான்சாபுரம் மெயின் ரோடு போதிய அகலம் இல்லாமல் உள்ளதால் கனரக வாகனங்கள் வரும்போது நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்கள் விபத்திற்கு ஆளாகும் அபாயம் காணப்படுகிறது. கிராம முன்சீப் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் ரோட்டில் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதே தெருவில் மேற்கு பகுதியில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டு வரும் நிலையில் வாறுகால் சேதமடைந்து காணப்படுகிறது. பிள்ளையார் கோவில் தெற்கு தெருவில் சேதம் அடைந்த அடிகுழாய் பயனற்று கிடக்கிறது. கான்சாபுரம் ரோட்டில் மன்னர் திருமலை தெருவிற்கு செல்லும் பாதையில் உள்ள ஓடையில் சிறு பாலம் இல்லாமல் மழை நேரங்களில் சகதி ஏற்பட்டு மக்கள் சிரமப்படுகின்றனர். இத்தகைய குறைகளை பேரூராட்சி நிர்வாகம் சரி செய்து தர வேண்டுமென வார்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர். ரோட்டை அகலப்படுத்தவும்
திருமலை, விவசாயி: கோபாலபுரம் விலக்கிலிருந்து புதுப்பட்டி வழியாக அத்தி கோவில் வரை உள்ள தார் ரோடு போதிய அகலம் இல்லாமல் இருப்பதால் கனரக வாகனங்கள், பஸ்கள் வரும்போது நடந்து செல்பவர்கள், டூவீலரில் செல்பவர்கள் நிலை தடுமாறும் அபாயம் உள்ளது. அதிகளவில் விவசாயிகள் விளை பொருட்களை கொண்டு செல்லும் நிலையில் இந்த ரோட்டினை அகலப்படுத்த வேண்டும். -சிறு பாலம் தேவை
செல்வராணி, குடும்பத் தலைவி: கிராம முன்சீப் தெருவில் தற்போது பேவர் பிளாக் ரோடு போடப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், தெரு முனையில் சேதமடைந்து காணப்படும் வாறுகால்களில் சிறு பாலம் அமைத்து சீரமைத்து தர வேண்டும். -பெயர்ந்த ரோடு
கனகராஜ், சுய தொழில் முனைவோர்: கிராம முன்சீப் தெருவில் தார் ரோடுகள் பெயர்ந்து காணப்படும் நிலையில் புதிதாக ரோடு அமைத்து தர வேண்டும். பயன்பாடு இல்லாத அடிகுழாயை அப்புறப்படுத்த வேண்டும். வாறுகால்களை சீரமைத்து கட்டி தர வேண்டும். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
சுப்புலட்சுமி, பேரூராட்சி தலைவர்: கான்சாபுரம் மெயின் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கிராம முன்சீப் தெருவில் பேவர் பிளாக் ரோடு அமைக்கப்பட்டுள்ளது அங்கு சேதமடைந்து காணப்படும் வாறுகாலில் சிறுபாலம் அமைக்கப்படும். வார்டு மக்கள் குறைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.
30-Oct-2024