உள்ளூர் செய்திகள்

வரவேற்பு விழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை ரமணாஸ் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் சேர்ந்த மாணவிகளுக்கு வரவேற்பு, துவக்க விழா நடந்தது. கல்லூரி முதல்வர் தில்லைநடராஜன் தலைமை வகித்தார். செயலர் இளங்கோவன் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் முத்துமுருகன் பேசினார். மாணவிகளுக்கு கல்லூரியின் விதிமுறைகள், பாடத்திட்டங்கள் பற்றி விளக்கப்பட்டது. கல்லூரி சேர்மன் ராமச்சந்திரன், பி.எட்., கல்லூரி செயலர் சங்கர நாராயணன், போக்குவரத்து செயலர் விக்னேஷ் பேசினர். பெற்றோர்,மாணவிகள் ஏற்புரை வழங்கினர். துணை முதல்வர் பவுர்ணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ