மேலும் செய்திகள்
24 மணி நேர அஞ்சல் சேவை
3 hour(s) ago
ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
3 hour(s) ago
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல் திறப்பு
3 hour(s) ago
சிவன் கோயில்களில் சங்காபிஷேகம்
3 hour(s) ago
விருதுநகர்: அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகள், மாவட்ட தலைமை, தாலுகா அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு, மாதத்தில் ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை, அரசு விடுமுறை நாட்களில் விடுமுறை வழங்கப்படுகிறது. ஆனால் மருத்துவ விடுப்பு வழங்கப்படுவதில்லை. உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுப்பு எடுத்தால் ஊதியம் பிடித்தம் செய்யப்படுகிறது. இதே நிலை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் தொகுப்பூதிய பணியாளர்களான மருந்தாளுனர், பல்நோக்கு மருத்துவ பணியாளருக்கும் நீடிக்கிறது. எனவே அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago