விவசாயி தற்கொலைக்கு பின்பாவது காட்டுப்பன்றிகளை அரசு கட்டுப்படுத்துமா
திருச்சுழி:விவசாயி தற்கொலைக்கு பின்காவது அரசு காட்டுபன்றிகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய சங்கத்தினர் தெரிவித்தனர்.ராமராஜ், குல்லம்பட்டி கண்மாய் நீர்நிலை பாசன சங்கத் தலைவர் : இன்றைய சூழலில் விவசாயம் செய்வதே கேள்விக்குறியாக உள்ளது. அதிக மழை அதிக வெயில் ஆகிய காலநிலை மாற்றத்தால் விவசாயம் செய்வது கஷ்டமாக உள்ளது. இந்த நிலையில் இருக்கின்ற பயிர்களை காட்டுப்பன்றிகள், மான்கள் சேதம் செய்து விடுகின்றன.காட்டுப்பன்றிகளை ஒழிக்க பல முறை மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுக்கும் நடவடிக்கை இல்லை. இன்றைக்கு ஒரு விவசாயி தோட்டத்தில் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதம் செய்ததால் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நான் பலமுறை விவசாய சங்க கூட்டங்களில் இது குறித்து வலியுறுத்தியுள்ளேன். அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. விவசாயிகளுக்கு தேவையான பிரச்சனைகளை உடனுக்குடன் அரசு தீர்த்து இதுபோன்ற தற்கொலைகளை தடுக்க வேண்டும்.