உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / வீரசோழன் கிருதுமால் நதியில் மணல் திருட்டில் பெண்கள்

வீரசோழன் கிருதுமால் நதியில் மணல் திருட்டில் பெண்கள்

நரிக்குடி: நரிக்குடி வீரசோழன் கிருதுமால் நதியில் சாக்குகளில் மணல் எடுத்து பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர்.நரிக்குடி வீரசோழன் அருகே கிருதுமால் நதி செல்கிறது. இந்த நதியில் ஏராளமான மணல் உள்ளன. லாரிகளில் அள்ளிச் சென்றதால் ஆங்காங்கே பள்ளங்களாக உள்ளன. கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து லாரிகளில் மணல் திருடுவது தடுக்கப்பட்டது. அதற்கு ஏராளமான மாட்டு வண்டிகளைக் கொண்டு மணல் திருட்டில் ஈடுபட்டு, பின் புகார் எழுந்ததையடுத்து வருவாய்த்துறையினர், போலீசார் கடும் நடவடிக்கை எடுத்து தடுத்தனர். போலீஸ் ஸ்டேஷன்களில் மாட்டு வண்டிகள் துருப்பிடித்து கிடக்கின்றன. அதற்குப் பின் மாட்டு வண்டி பயன்பாடு குறைந்தது. தற்போது சிமென்ட் சாக்கு பையில் மணல்களை அள்ளி பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர். 25 சிமென்ட் சாக்குகளில் அரை மூடையாக தலைசுமையாக சுமந்து கட்டடம் கட்டம் பகுதியில் குவித்தால் போதும், நல்ல வருமானம் கிடைக்கிறது. ஏராளமான பெண்கள் காலை மாலை நேரங்களில் மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர். ஆற்றில் உள்ள கனிமங்கள் குறைந்து நீர்மட்டம் பாதிக்க வாய்ப்பு உள்ளது. மணல் திருட்டில் ஈடுபடும் பெண்கள் மீது வருவாய்த்துறை, போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து, திருட்டை தடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை