உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / விஷ்வ பிரம்ம தினவிழா

விஷ்வ பிரம்ம தினவிழா

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் விஸ்வகர்மா பொற்கொல்லர் சங்கம் சார்பாக விஷ்வ பிரம்ம தின விழா நடந்தது. சங்கத் தலைவர் பொன்ராஜ் தலைமை வகித்தார். ஜெய்சங்கர், பாண்டியன், அய்யாசாமி, மாலையப்பன் கார்த்திக் ராஜா முன்னிலை வகித்தனர். செயலாளர் நவிராஜன் வரவேற்றார். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். கூட்டத்தில் ஐந்து தொழில் செய்யும் குழந்தைகளுக்கு 6 ம் வகுப்பு முதல் மேற்படிப்பு வரை இலவச கல்வி வழங்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாவட்ட துணைச் செயலாளர் அய்யாசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை