மேலும் செய்திகள்
நீளமான சொகுசு பஸ்கள் 20 பொங்கலுக்குள் இயக்க முடிவு
2 minutes ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
2 minutes ago
சிவகங்கை: தி.மு.க., அரசு புறக்கணித்த 'வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை உருவாக்கும் திட்டத்திற்கு' அ.தி.மு.க., அரசு கூடுதல் நிதி ஒதுக்கியுள்ளது.
கடந்த தி.மு.க., அரசு சமுதாய, பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவை சேர்ந்த வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உணவு பொருள் தயாரிப்பு, 'ரெடிமேட் கார்மெண்ட்ஸ்' உற்பத்தி செய்தல், 'ஜெராக்ஸ்', மாவு மில், 'கம்ப்யூட்டர் சென்டர்' போன்ற சேவை தொழில்கள்மற்றும் பலசரக்கு, ஜவுளி வியாபாரம் செய்வதற்கு, 15 சதவீத மானியத்தில் கடன் வழங்கியது. இத்திட்டம் துவங்கியபோது, 2,595 பேரின் கடனுக்கு, 5.21 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கப்பட்டது. ஆனால், சட்டசபை தேர்தல் தடை காரணமாக, 1,261 பேருக்கு 3.56 கோடி ரூபாய் மானியம் மட்டுமே தரப்பட்டது. இத்திட்டத்தை தி.மு.க., அரசு முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்திற்கு அ.தி.மு.க., அரசு புத்துயிர் அளித்துள்ளது. அதன்படி, 2011 - 2012ம் ஆண்டில் 10 ஆயிரம் பேருக்கு மானியமாக வழங்க 15 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில்,''அரசு இத்திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கியதால், இளைஞர்கள் அதிக வேலைவாய்ப்பு பெற வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.
2 minutes ago
2 minutes ago