உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஏர்இந்தியா விமான அமைச்சகம் மீது சி.ஏ.ஜி. கண்டனம்

ஏர்இந்தியா விமான அமைச்சகம் மீது சி.ஏ.ஜி. கண்டனம்

புதுடில்லி: ஏர்இந்தியா நிறுவனம் விமானங்களை வாடகைக்கு எடுத்தது கூடுதல் விமானங்கள் வாங்கியது மற்றும் குத்தகைக்கு எடுத்த விவகாரம் உள்ளிட்ட செலவுகளி்ல் ரூ. ஆயிரத்து 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை கட்டுப்பாட்டு ஜெனரலான சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள அறிக்கையி்ல் கூறப்பட்டுள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனம் கே.ஜி. ஆற்றுப்படுக்கையில் கச்சா எண்ணெய் எடுத்ததில் ஏராளமான அரசு விதி மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஏர்இந்தியா விமானம் ரூ.200 கோடி கடனுக்கு வட்டியாக ரூ. 314 கோடி கட்டியுள்ளது. இதனால் அரசுக்கு ரூ. ஆயிரத்து 700 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.ஏர்இந்தியா, ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்களில் மீதான சி.ஏ.ஜி.யின் அறிக்கை டில்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதால் . புயலை கிளப்பும் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி