மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
ஈரோடு:ஈரோட்டில் காம்ப்ளக்ஸ் மாடியில் இருந்து கீழே விழந்த போலீஸ்காரர், மர்மமாக இறந்து கிடந்தார்.
ஈரோடு அருகே சென்னம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்லமுத்து மகன் கார்த்திகேயன் (33). ஆயுதபடை பிரிவில் முதலில் பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இப்பிரிவில் இருந்து சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.இவர், கடந்த 15 மாதங்களுக்கு முன், உடன் பிறந்த மூத்த சகோதரி மகள் ஆசிரியை லீலா திருமணம் செய்துக் கொண்டார். லீலா, 9 மாத கர்ப்பிணியாக உள்ளார்.விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு பணிக்கு, கார்த்திகேயன் ஈரோடு வந்து, காமராஜ் வீதி, பிரவின் காம்ப்ளக்ஸில் தங்கினார். கடந்த 6ம் தேதி இரவு இவரது மனைவி லீலா, கார்த்திகேயனுடன் ஃபோனில் தொடர்பு கொண்டபோது பதில் இல்லை.நேற்று முன்தினம் தொடர்பு கொண்ட போது, பிரவின் காம்ப்ளக்ஸில் பணியாற்றும் திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த மணி என்பவர், மொபைல் ஃபோனில் பேசியபோது, கார்த்திகேயன் வேலைக்கு சென்று விட்டதாக வாட்ச்மேன் தெரிவித்தார்.
சந்தேகம் அடைந்த லீலா, அவரது தந்தைக்கு தவகல் கொடுத்தார். நேற்று கார்த்திகேயன் தம்பி விஸ்வநாதன், அவரது மாமா பழனிசாமி ஆகியோர் பிரவின் காம்ப்ளக்ஸ் வந்து வாட்ச்மேனிடம் விசாரித்த போது, அவரது மொபைல் ஃபோன் மட்டும் இருந்ததாகவும், 2 நாட்களாக அவர் வரவில்லை, என்று தெரிவித்தார். அவர்கள் மாடியை சுற்றி பார்த்த போது, பிரவின் காம்ப்பளக்ஸ் அருகே உள்ள மாடியில் கார்த்திகேயன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.டவுன் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.டவுன் இன்ஸ்பெக்டர் வேலுமணி சம்பவ இடம் வந்து, கார்த்திகேயன் உடலை கைப்பற்றி, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். வாட்ச்மேன் மணியிடம், போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.கார்த்திகேயனுக்கு குடி பழக்கம் உள்ளதால், குடிபோதையில் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்திருக்கலாம் என, போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3