மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
மதுரை : மதுரையில் அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வன் வீட்டின் மீது, சோடா பாட்டில் வீசிய வழக்கில், தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்ட, அரசு குற்றவியல் வழக்கறிஞர் தமிழ்ச்செல்வனின் வீடு, பி.பி.சாவடியில் உள்ளது. சமீபத்தில் இவரது மொபைல் போனில் தொடர்பு கொண்ட சிலர், கொலை மிரட்டல் விடுத்தனர். செப்., 2ல், இரவு, வீட்டின் மீது, சோடா பாட்டில் வீசப்பட்டது. இது தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த துணைமேயர் மன்னன், நகர் இளைஞரணி அமைப்பாளர் ஜெயராமன் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கில், இருவரும் தலைமறைவாயினர். இதற்கிடையே, பழங்கா நத்தம் சக்திநாதன் என்பவரிடம், ஆவின் பணியாளர்களுக்கு, 'சிம்' கார்டு இணைப்பு பெற்றுத்தருவதாகக் கூறி, 3.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஜெயராமன், செப்.,7ல் கைது செய்யப்பட்டார். தற்போது மதுரை சிறையில் உள்ளார்.சோடா பாட்டில் வீசிய வழக்கிலும் இவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3