மேலும் செய்திகள்
கோவில் சொத்துகள் வழக்கின் தீர்ப்பு: ஹிந்து முன்னணி தலைவர் வரவேற்பு
1 hour(s) ago | 1
மேலும் 3 நா.த.க.,வினர் தாராபுரத்தில் கைது
3 hour(s) ago
‘ ரெட் அலெர்ட்’ என்றால் என்ன?
4 hour(s) ago
''மத்திய அரசின், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், அரசியல் உள்நோக்கமின்றி நகரங்கள் தேர்வு செய்யப்படுகின்றன,'' என, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர், வெங்கையா நாயுடு தெரிவித்தார்.சென்னை, ஐ.ஐ.டி., மற்றும் இந்திய தேசிய இன்ஜினியரிங் அகாடமி இணைந்து நடத்தும் இன்ஜினியர்களுக்கான மாநாடு, சென்னை, ஐ.ஐ.டி.,யில் துவங்கியது. மாநாட்டை, மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு துவக்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:இந்தியாவில், அதிக எண்ணிக்கையில், இன்ஜி., கல்லுாரிகளுக்கு அனுமதி அளித்ததால், சாதாரண தொழிலாளர்களின் குழந்தைகளும், பி.இ., - பி.டெக்., படிக்க முடிந்துள்ளது. இன்ஜி., கல்லுாரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப வேண்டும்; இன்ஜி., படிப்பின் தரத்தை உயர்த்த வேண்டும்.சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற நகரங் களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, நகரங்களை திட்டமிடும் துறையினர் மற்றும் ஆளும் அரசி யல் கட்சியினரின் கண்களை திறந்துள்ளது. வெள்ளத்தில் நகரமே மூழ்க, ஆக்கிரமிப்பே முக்கிய காரணம். நீர்நிலைகளின் கரைகளில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இது குறித்து ஆய்வு செய்ய, சென்னை ஐ.ஐ.டி.,யை கேட்டுக் கொண்டுள்ளேன்.அரசின், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத் தில், மொத்தம், 100 நகரங்களில், 20 நகரங்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன; 40 நகரங்கள், இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும். நகரங்கள் தேர்வில், அரசியல் உள்நோக்கம் இல்லை; சிலவிதிகளை வைத்துள்ளோம்; அதில் பொருந்தும் நகரங்களை, வெளிப்படையாக தேர்வு செய்கிறோம்.இந்த திட்டத்தில், 33 ஸ்மார்ட் நகரங்களுக்கு, 78 ஆயிரத்து, 200 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இந்த நகரங்களை சரியாக கட்டமைக்க, இன்ஜினியர்கள், புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும். இயற்கையை பாதுகாக்கும் வகையில், கலாசாரத்தை பேணும் வகையில் அப்பணிகள் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர்பாஸ்கர் ராமமூர்த்தி வரவேற்றார். இந்திய தேசிய இன்ஜி., அகாடமி தலைவர் பி.என்.சுரேஷ் மற்றும் ஐ.ஐ.டி., பேராசிரி யர்கள் பங்கேற்றனர்.தமிழ்த்தாய் வாழ்த்து 'மிஸ்சிங்':தமிழகத்தில், கவர்னர் மாளிகை முதல், அனைத்து அரசு மற்றும் கல்வி நிறுவன விழாக்களில், தமிழ் த்தாய் வாழ்த்தையே முதலில் ஒலிக்கச் செய்வது மரபு. இதற்கு மாறாக, ஐ.ஐ.டி., இன்ஜினியர்கள் மாநாட்டின் துவக்கமாக, வங்க மொழி கவிஞரின், 'வந்தே மாதரம்' பாடலை, மாணவர்கள் பாடினர். இதை, விழாவில் பங்கேற்ற பலரும் எதிர்பார்க்கவில்லை. 'வந்தே மாதரம் பாடுவதில் தவறில்லை; ஐ.ஐ.டி., போன்ற கல்வி நிறுவனத்தில்,தமிழ்த்தாய் வாழ்த்து பாடினால் தான் தமிழுக்கான அங்கீகாரத் தையும், அங்கீகரிக்கப்பட்ட மொழிப் பாடல் உள்ள தையும் மற்ற மாநிலத்தினர் அறிவர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை, ஐ.ஐ.டி., வேண்டுமென்றே புறக்கணித்ததா; தெரியாமல் நடந்த தவறா...?' என, பலரும் முணுமுணுத்தனர்.இன்ஜி., படிப்பில் தரம் குறைவு:உயர்கல்வி செயலர் வருத்தம்:மாநாட்டில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின், உயர்கல்வி செயலர், வினய்ஷீல் ஓபராய் பேசியதாவது:நாம் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி நிறுவனங் களை அதிகப்படுத்தி உள்ளோம். அதே நேரம், இன்ஜி., படிப்போரில், தரமான மாணவர்கள் மிகக் குறைவு. உயர்கல்விக்கு வருவோரில், 40 சதவீதம் மாணவர்கள், படிப்பை பாதியில் கை விடுகின்றனர். படிப்பை முடித்தோரில், 53 சதவீதம் பேர் மட்டுமே வேலை வாய்ப்பு பெறுகின்றனர். மேல்படிப்பு, வேலை வாய்ப்புக்காக நடத்தப் படும், 'கேட்' தேர்வில், 15 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெறுகின்றனர். இன்ஜி., படித்து விட்டு வரும் மாணவர்களின் தரம் எப்படி குறைகிறது என, ஆய்வு செய்ய வேண்டும்; கல்வியின் தரத்தை உயர்த்துவது அவசியம்.இவ்வாறு அவர் பேசினார்.- நமது நிருபர் -
1 hour(s) ago | 1
3 hour(s) ago
4 hour(s) ago