மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago
நெய்வேலி: காணாமல் போன பள்ளி மாணவி, தலையின்றி கிணற்றில் அழுகிய நிலையில், பிணமாக மிதந்த சம்பவத்தால், நெய்வேலி பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. கடலூர் மாவட்டம், நெய்வேலி அடுத்த வானதிராயபுரத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,35; வடலூரில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் கனிதா,10, வடலூரில் உள்ள தனியார் பள்ளியில், 5ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த 17ம் தேதி மாலை, பள்ளியில் இருந்து கனிதா வீட்டிற்குத் திரும்பாததால் சந்தேகமடைந்த ரவிச்சந்திரன், நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார்.விசாரணையில், பள்ளியை விட்டு வீட்டிற்கு நடந்து சென்ற சிறுமி கனிதாவை, வாலிபர் ஒருவர் சைக்கிளில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இந்நிலையில், காலை வானதிராயபுரம் அருகே உள்ள, தென்குத்து ஆஞ்சநேயர் கோயில் அருகே, ராஜ் என்பவரின் வீட்டுத் தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழக் கிணற்றில், சிறுமியின் உடல் தலையின்றி கிடந்தது. உடல் அருகே, சாப்பாட்டுக் கூடை ஒன்றும் மிதந்தது. கிராம மக்கள், கிணற்றில் மிதந்த உடலைப் பார்த்து, இறந்து கிடப்பது காணாமல் போன சிறுமி கனிதா என்பதை உறுதி செய்தனர்.தகவலறிந்த எஸ்.பி., பகலவன், நெய்வேலி டி.எஸ்.பி., மணி, மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கிணற்றில் மிதந்த சிறுமி கனிதாவின் உடலை, தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்டனர். இதுகுறித்து, அப்பகுதி மக்களிடம் விசாரணை செய்தனர். கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சிறுமி கனிதாவின் உடல் அழுகி இருந்ததால், அதே இடத்தில் தடயவியல் நிபுணர் சண்முகம், பண்ருட்டி அரசு மருத்துவமனை டாக்டர் எழில் தலைமையிலான குழுவினர், பிரேத பரிசோதனை செய்தனர். கனிதாவின் தலையைத் தேட, கிணற்றில் உள்ள தண்ணீரை இறைக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, கிணற்றில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால், தலையைத் தேடும் பணி தடைபட்டது.நாளை, ராட்சத மோட்டார் கொண்டு, தண்ணீரை வெளியேற்றி, உரைகளை இறக்கி மண் சரிவை தடுத்து, தலையை தேட போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையே, சிறுமி கனிதாவை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், சிறுமி கனிதா கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டால், குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என, டி.எஸ்.பி., மணி உறுதி அளித்தார். அதனையேற்று, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்த மறியலால், 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
2 hour(s) ago
3 hour(s) ago