உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீப்பெட்டி ஆலையில் தீ: இருவர் காயம்

தீப்பெட்டி ஆலையில் தீ: இருவர் காயம்

விருதுநகர்: சாத்தூரில் தீப்பெட்டி ஆலையில் ஏற்பட்ட தீவிபத்தில் மோலாளர் மற்றும் பெண் தொழிலாளி உள்பட இருவர் பலத்த தீக்காயம் அடைந்தனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒரு தீப்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தில் தொழிற்சாலையில் மேலாளர் ஜேம்ஸ்(45) மற்றும் பெண் தொழிலாளி முனியம்மாள் ஆகியோர் காயமடைந்தனர். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஜேம்‌ஸ் உடல் 100 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் உயிருக்கு போராடி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி