மேலும் செய்திகள்
இந்தியாவின் சுதேசி சமூக வலைதளம் அரட்டையில் இணையுங்கள் வாசகர்களே!
3 hour(s) ago | 5
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
6 hour(s) ago | 5
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
7 hour(s) ago | 21
மதுரை:மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தானயம்பட்டியைச் சேர்ந்த பாண்டியனை மிரட்டியதாக, தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் பொட்டு சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.பாண்டியனுக்கும் பொட்டு சுரேஷுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. 2009ல் பொட்டுசுரேஷ் மற்றும் அவரது தம்பி சரவணன், மதுரை உதவி போலீஸ் கமிஷனர் குமாரவேல், தல்லாகுளம் எஸ்.ஐ., பார்த்திபன் ஆகியோர் மிரட்டியுள்ளனர். பொட்டுசுரேஷ் போனில் மிரட்டியதில், பாண்டியனின் தந்தை இறந்ததாக, அப்போது, எழுமலை போலீசில் பாண்டியன் புகார் கொடுத்துள்ளார்.அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று மதுரை எஸ்.பி., ஆஸ்ரா கார்க்கிடம் அளித்த புகாரின் பேரில் பொட்டு சுரேஷ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உட்பட, நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
3 hour(s) ago | 5
6 hour(s) ago | 5
7 hour(s) ago | 21