உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பதிவுகள் அழிப்பு

ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் பதிவுகள் அழிப்பு

விருதுநகர்: உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுவதால், சட்டசபைத் தேர்தலில் நடந்த ஓட்டுப் பதிவுகளை, காலாவதி தேதிக்கு முன்னரே அழிக்க, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக, தேர்தல் கமிஷனிடம் ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, தமிழக அரசு கேட்டுள்ளது. 45 ஆயிரம் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வழங்கப்படவுள்ளன. சட்டசபைத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து, 6 மாதங்கள் வரை பதிவுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். எனவே, கோர்ட்டில் வழக்குகள் நிலுவையில் உள்ள, எழும்பூர், கொளத்தூர், வேப்பனஹள்ளி, கள்ளக்குறிச்சி, திருவிடைமருதூர், கும்பகோணம், திருவண்ணாமலை, ரிஷிவந்தியம், பெரியகுளம், திருப்புத்தூர், திருச்சுழி, திருச்செந்தூர் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட, ஓட்டு இயந்திரப் பதிவுகள் மட்டும் பாதுகாக்கப்படவுள்ளன. மற்ற தொகுதிகளின் ஓட்டுப் பதிவுகளை அழித்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு வழங்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை