உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்: கோ - ஆப்டெக்ஸ்

தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்: கோ - ஆப்டெக்ஸ்

சென்னை: 'தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு அரசு மூலம் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு, தமிழகத் தறிகளிலிருந்து மட்டுமே வேட்டி, சேலைகள் வாங்கப்படும். பிற மாநிலங்களிலிருந்து வாங்கப்பட உள்ளதாகக் கூறப்படுவது தவறான தகவல்' என்று, கோ - ஆப்டெக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து, கோ - ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் கூறுகையில், இத்திட்டத்திற்கு, தமிழக கைத்தறி, பெடல் மற்றும் விசைத் தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் உருவாக்கப்படும் மொத்த வேட்டி, சேலைகளும் வாங்கிக் கொள்ளப்பட்ட பிறகு, மீதம் தேவைப்படும் வேட்டி, சேலைகளை பிற மாநில தறிகளிலிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்குவதைவிட, நேரடியாக பொது ஏல ஒப்பந்தம் மூலம் வாங்கினால், செலவு குறைய வாய்ப்புள்ளது. இது குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், தமிழகத்தில் உள்ள தறிகளிலிருந்தே வேட்டி, சேலைகள் வாங்கப்பட உள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகப் பேசப்படுவது தவறான தகவல் என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி