உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாநகராட்சி மேயர் தேர்தல் :அதிமு.க.,வேட்பாளர் அறிவிப்பு

மாநகராட்சி மேயர் தேர்தல் :அதிமு.க.,வேட்பாளர் அறிவிப்பு

சென்னை: வரும் அக்டோபரில் உள்ளாட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது நடைபெற உள்ள தேர்தலில் மாநகராட்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் மேயர்கள் தேர்தலில் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 10 மாநகராட்சிகளுக்கான மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பெயரை அ.தி.மு.க.,பொது செயலாளர் ஜெ அறிவித்துள்ளார். இதன்படி சென்னைக்கு சைதை துரைசாமி மதுரை முன்னாள் எம்.பி.,ராஜன்செல்லப்பா, திருச்சி.,எம்.எஸ்.ஆர். ஜெயா, கோவை முன்னாள் அமைச்சர் செ.ம.வே<லுசாமி ஈரோடு மல்லிகா பரமசிவம், நெல்லை விஜிலாசத்தியானந்த், சேலம் சவுண்டப்பன், தூத்துக்குடி சசிகலா புஷ்பா, வேலூர் கார்த்தியாயினி திருப்பூர் ஆர் .விசாலாட்சி ஆகியோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மாநகராட்சிகளில் திருச்சி , வேலூர், தூத்துக்குடி, நெல்லை,திருப்பூர் , ஈரோடு ஆகிய ஆறு இடங்களில் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி