உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவுன்சிலர், அதிகாரிகளுக்கு பிரியாணி விருந்துடன் பரிசு

கவுன்சிலர், அதிகாரிகளுக்கு பிரியாணி விருந்துடன் பரிசு

சிவகாசி: சிவகாசி நகராட்சி கூட்டம், அதிகாரிகள், கவுன்சிலர்களுக்கு பிரியாணி விருந்து மற்றும் பரிசு பொருட்களுடன் நிறைவு பெற்றது .

சிவகாசி நகராட்சி ஐந்து ஆண்டுகால நிறைவு கூட்டம், தலைவி ராதிகாதேவி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் அசோகன் முன்னிலை வகித்தார். நகராட்சி தலைவி பேசுகையில்,'' கட்சிகளுக்கு அப்பாற்பட்டு,ஐந்து ஆண்டுகள் ஒரே குடும்பமாக இருந்து, நிர்வாகம் நடக்க ஒத்துழைப்பு வழங்கிய கவுன்சிலர்களுக்கு நன்றி. இரு ஆண்டுகளாக மழை இல்லாமல் இருந்தபோதிலும், அதிகாரிகளின் முயற்சியால், குடிநீர் தட்டுப்பாடு சமாளிக்கப்பட்டது,'' என்றார். இதை தொடர்ந்து , கவுன்சிலர்களும் நன்றி தெரிவித்தனர். கூட்ட நிறைவில், கவுன்சிலர்கள், அதிகாரிகளுக்கு , பிரியாணி விருந்துடன், துணை தலைவர் அசோகன் சார்பில், கைக்கடிகாரம், பரிசு பொருட்களும் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை