| ADDED : செப் 26, 2011 11:03 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி, காலை 8 மணியளவில் கொடியேற்றப்படுகிறது. மொத்தம் பத்துநாள் திருவிழாவில், தினமும் முத்தாரம்மனுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான, மகிஷாசூரசம்ஹாரம், பத்தாம் நாளான, அக்.,6ம் தேதி நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடக்கிறது. ஆணவம் கொண்டு போரிடும் சூரனை, அம்மன் வதம் செய்யும் இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பர். நேர்த்திக்கடனுக்காக பல்வேறு வேடங்களை அணிந்து குழுக்களாக கிராமம் கிராமமாக சென்று கலைநிகழ்ச்சி நடத்தி காணிக்கை பிரிக்கும் பக்தர்கள், அன்று கோயிலைச்சேர்ந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.