உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கால்நடை ஆராய்ச்சி கட்டடங்கள்:வீடியோகான்பரன்சில் ஜெ., திறப்பு

கால்நடை ஆராய்ச்சி கட்டடங்கள்:வீடியோகான்பரன்சில் ஜெ., திறப்பு

சென்னை:மூன்று மாவட்டங்களில், கால்நடை மற்றும் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சி கட்டடங்களை, வீடியோகான்பரன்ஸ் முறையில் முதல்வர் ஜெயலலிதா, நேற்று முன்தினம், துவக்கி வைத்தார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் விரிவாக்கப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்கள், தமிழகத்தில் 22 மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. கால்நடை, கோழியினம் மற்றும் மீன் வளர்ப்பில் நவீன தொழில்நுட்பங்களை மாவட்ட அளவில் அனைத்து பண்ணையாளர்களான விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி, அவற்றைக் கையாண்டு பயன்பெற வழிவகுப்பதே இவற்றின் பணி.பெரும்பாலான பல்கலைக்கழக பயிற்சி மையங்கள், இதுவரை வாடகை கட்டடத்திலேயே இயங்கி வந்தன. திண்டுக்கல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடம், 71 சென்ட் நிலத்தில் 29 லட்சம் ரூபாய்; தஞ்சாவூர் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய கட்டடம், ஒரு ஏக்கரில் 48 லட்சம் ரூபாய்; திருவாரூர் உழவர் பயிற்சி மையக் கட்டடம், 85 சென்ட்டில் 26 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயில் கட்டப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ