உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிறந்து இரு நாளானஆண் குழந்தை மீட்பு

பிறந்து இரு நாளானஆண் குழந்தை மீட்பு

சென்னை:ரயில் நிலையத்தில், அனாதையாக கிடந்த, பிறந்து இரண்டு நாட்களான ஆண் குழந்தை மீட்கப்பட்டது.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, அரக்கோனம் வரை, ரயில்வே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். நேற்று மாலை, இந்து கல்லூரி ரயில் நிலையத்தில், பிறந்து இரண்டு நாட்களே ஆன, ஆண் குழந்தை ஆனாதையாக கிடந்தது.இக்குழந்தையை ரயில் நிலையத்திலிருந்த பயணிகள், ரோந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். குழந்தையின் தாய் யார் என்ற விவரம் தெரியவில்லை. ரயில்வே போலீசார், குழந்தையை மீட்டு, எழும்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.ரயில்வே போலீஸ் டி.எஸ்.பி., பொன்ராம் விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை