உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெண் டி.எஸ்.பி., திடீரென இடமாற்றம்

பெண் டி.எஸ்.பி., திடீரென இடமாற்றம்

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட தி.மு.க., செயலரிடம் பணத்தகராறு புகாரில் விசாரணை நடத்திய பெண் டி.எஸ்.பி., திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி.,சசிகலா. இவர், நில அபகரிப்பு புகார்களையும் விசாரித்துவந்தார். நில விற்பனையில் ஒருவருக்கு மீதிப்பணம் தரவேண்டியது தொடர்பான புகாரில், மாவட்ட தி.மு.க., செயலர் பெரியசாமியிடம் இவர், செப்.,5ம் தேதி விசாரித்தார். இந்நிலையில், டி.எஸ்.பி., சசிகலா திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவு சென்னை போலீஸ் தலைமையிடத்திலிருந்து, தூத்துக்குடி எஸ்.பி., அலுவலகத்திற்கு பேக்ஸில் வந்தது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்க பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ