மேலும் செய்திகள்
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
3 hour(s) ago | 13
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
10 hour(s) ago | 3
திருநெல்வேலி:மத்திய அமைச்சர் நாராயணசாமி சந்திப்பிற்கு பிறகு அணுஉலை போராட்டக்குழுவினர் முதல்வரையும் நாளை சந்தித்து பேச உள்ளனர்.கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் உச்சக்கட்டத்தில் உள்ளது. கூடங்குளத்தை அடுத்துள்ள இடிந்தரையில்செப்.,11ல் துவங்கிய உண்ணாவிரதம் இன்று பத்தாவது நாளை எட்டியது. இன்று மாலையில் நாராயணசாமி இடிந்தரைக்கு நேரில் சென்றார். கடந்த பத்து நாட்களாக நெல்லை கலெக்டரோ, தமிழக அமைச்சர்களோ, அரசு பிரதிநிதிகளோ செல்லாத நிலையில் மத்திய அமைச்சர் நாராயணசாமியின் விசிட் முக்கியத்துவம் பெற்றுள்ளது.அவர் இடிந்தகரையில் உண்ணாவிரத பந்தலுக்குள் நுழைந்தபோது ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பொதுமக்கள்'மவுனவிரதம்' போல அமைதிகாத்தனர். அவருடன் யாரும் பேசவில்லை. போராட்டக்குழு உதயகுமார்கோரிக்கை மனுகொடுத்து அதனை விளக்கி பேசினார். மற்றபடி அமைச்சர் நாராயணசாமியை பேசஅனுமதிக்கவில்லை. இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா, போராட்டக்குழுவினருடன் பேச ஏற்கனவேநேரம் ஒதுக்கியிருந்தார். இன்றுமாலை வரையிலும் முதல்வரை சந்திப்பதில்லை என்ற முடிவில் இருந்தனர்.இருப்பினும் இன்று இரவு உதயக்குமார், புஷ்பராயன், பங்கு தந்தை ஜெயக்குமார், வக்கீல் சிவசுப்பிரமணியன்,லிட்வின் உள்ளிட்டோர் சென்னை கிளம்பிச்சென்றனர். சென்னையில் ஏற்கனவே முகாமிட்டுள்ள தூத்துக்குடி பிஷப் யுவான் அம்புரோஸ், நாகர்கோவில் கோட்டார் பிஷப் பீட்டர் ரெமிஜியஸ் ஆகியோர் நாளை காலை 11 மணிக்குமுதல்வரை சந்தித்து பேசுகிறார்கள்.
3 hour(s) ago | 13
8 hour(s) ago | 1
10 hour(s) ago | 3