உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தோற்றாலும் கோல்கட்டா அணி தகுதி

தோற்றாலும் கோல்கட்டா அணி தகுதி

ஐதராபாத்: சாம்பியன்ஸ் லீக் தகுதிச் சுற்றுப் போட்டியில் சாமர்சட் அணி, கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியை 11 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. கோல்கட்டா அணி தோல்வி அடைந்த போதும், 'ரன் ரேட்' அடிப்படையில் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றது. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஐதராபாத்தில் நடந்தது. 'ஏ' பிரிவு போட்டி ஒன்றில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ், சாமர்சட்(இங்கிலாந்து) அணிகள் மோதின. 'டாஸ்' வென்று பேட் செய்த சாமர்சட் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணி குறைந்தபட்சம் 153 ரன்கள் எடுத்தால், பிரதான சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலையில் களமிறங்கியது. இந்நிலையில் அந்த அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. ஆனாலும் 'ரன் ரேட்' அடிப்படையில் பிரதான சுற்றுக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை