உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யும் கிராம மக்கள்

சுழற்சி முறையில் தலைவரை தேர்வு செய்யும் கிராம மக்கள்

கம்பம்: தேனி மாவட்டம், அணைப்பட்டி அணைப்பட்டி ஊராட்சியில் 1991 ல் நடைபெற்ற ஊராட்சி தேர்தலில் மோதல் ஏற்பட்டதால், இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் 'பேசி' ஒரு முடிவிற்கு வந்தனர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவி ஒரு சமுதாயத்திற்கு வழங்கப்பட்டால், ஊராட்சி தலைவர் பதவி மற்றொரு சமுதாயத்திற்கு ஒதுக்கப்படும். அடுத்த முறை இது மாறும். யார் தலைவர், ஒன்றிய கவுன்சிலர் என்பதை, அந்தந்த சமூகத்தை சேர்ந்தவர்களே முடிவு செய்ய வேண்டும். இந்த நடைமுறை கடந்த 1996, 2001,2006 தேர்தல்களில் கடைபிடிக்கப்பட்டது. தற்போது 2011 தேர்தலிலும் இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட உள்ளதாக, இந்த கிராமத்தினர் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி