மேலும் செய்திகள்
முதல்வர் பேச்சை இயேசுவே ஏற்க மாட்டார்: தமிழிசை
30 minutes ago
கோர விபத்து: கார்கள் மீது அரசு பஸ் மோதியதில் 9 பேர் பலி
1 hour(s) ago
பட்டா வழங்க ரூ.5,000 லஞ்சம்: வி.ஏ.ஓ., கைது
1 hour(s) ago
பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அருகே, தபால் நிலையத்தில் ஜெனரேட்டரில் இருந்து அதிகளவில் புகை வெளியேறியதைப் பார்த்த மக்கள், அலறியடித்து ஓடியதால் பரபரப்பு நிலவியது.கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் மெயின் ரோட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் கீழ் தளத்தில், தபால் நிலையம் இயங்கி வருகிறது. நேற்று காலை மின்சாரம் இல்லாததால், அலுவலக ஊழியர்கள் ஜெனரேட்டரை இயக்கினர்.
ஜெனரேட்டரில் இருந்து வெளியே புகை, சிறிது நேரத்தில் காம்ப்ளக்ஸ் முழுவதும் பரவியது. இதனால், அலுவலகத்திற்கு வந்தவர்கள், காம்ப்ளக்சில் குடியிருந்தவர்கள் என அனைவரும் அலறியடித்து ஓடினர்.தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, ஜெனரேட்டர் மெயின் சுவிட்சை நிறுத்தினர். இருந்தும் ஜெனரேட்டர் நிற்காததால், பின்னர் டேங்கில் இருந்து ஜெனரேட்டருக்கு செல்லும் டீŒலை தடை செய்தனர். அதன் பிறகே கொஞ்சம், கொஞ்சமாக புகை குறைந்து ஜெனரேட்டர் நின்றது. ஒரு மணி நேரம் நீடித்த இச்Œம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
30 minutes ago
1 hour(s) ago
1 hour(s) ago