உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / துணைநகரத்திட்டம்: கருணாநிதிக்கு ராமதாஸ் பதில்

துணைநகரத்திட்டம்: கருணாநிதிக்கு ராமதாஸ் பதில்

திண்டிவனம்: அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த துணை நகர திட்டம் குறித்து நான் பேசியதை தி.மு.க. தலைவர் கருணாநிதி தவறாக தனது நாளேட்டில் குறிப்பிட்டுள்ளதாக பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:கடந்த தி.மு.க. ஆட்சியில் துணை நகர திட்டம் என்ற பெயரில் 120 கிராமங்களை அழிக்க தி.மு.க.அரசு முயற்சிக்கிறது அதைத்தான் நான் எதிர்த்தேன். ஆனால் இன்று அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்திற்கு சொந்தமான 311 ஏக்கர் நிலங்களில் தான் துணைநகரத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தி.மு.க. தலைவர் கருணாநிதி சரியாக புரிந்துகொள்ளாமல் தனது கட்சி நாளேட்டில் துணைநகர திட்டம் குறித்து நான் வெளியிட்ட அறிக்கையை பற்றி குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை