உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜூன் 4க்கு பின்பே அ.தி.மு.க., நிலை தெரியும்

ஜூன் 4க்கு பின்பே அ.தி.மு.க., நிலை தெரியும்

காரைக்குடி:ஜூன் 4க்கு பின் அ.தி.மு.க., நிலை தெரியும் என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.காரைக்குடியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தேர்தல் முடிவதற்கு முன்பாக திருமயத்திற்கு கண்டிப்பாக வந்து சுவாமி தரிசனம் செய்வேன் என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருந்தார். அதன்படி தற்போது வந்துள்ளார். பிரதமர் மோடி விவேகானந்தர் பாறையில் 48 மணி நேரம் தியானம் செய்கிறார். பிரதமரின் இந்த தனிப்பட்ட நிகழ்ச்சிக்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரதமர் மோடி பிரசாரத்தை துவங்கியது தமிழகத்தில் தான். பிரசாரத்தின் கடைசி நாளில், மோடி, அமித் ஷா என இரு தலைவர்களும் தமிழகத்திற்கு வந்துள்ளனர். தமிழகத்துக்கு மிகப் பெரிய மரியாதை அளிப்பதாலேயே இருவரும் இங்கு வந்துள்ளனர். ஜெயலலிதாவை ஹிந்துத்துவா தலைவராக குறிப்பிட்டது ஏன் என்பது குறித்து உரிய விளக்கம் அளித்து விட்டேன். நான் உண்மையான ஹிந்துவாக இருந்தால், எந்த இடத்திலும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் அவமதிக்க மாட்டேன். அதுதான் ஹிந்துத்துவா. தமிழகத்தில் தங்களது சொந்த லாபத்துக்காக சிலர் ஹிந்துத்வா என்ற வார்த்தையை பேசுபொருளாக்குகின்றனர். ஜூன் 4க்கு பின் அ.தி.மு.க., எங்கே இருக்கப் போகிறது, அதன் நிலை என்ன என்பதெல்லாம் சொல்லாமலேயே தெரியவரும். அடுத்த லோக்சபாவில் தமிழக பா.ஜ., - எம்.பி.,க்கள் அதிகமாக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை