உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் கடை வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி

ரேஷன் கடை வாகனங்களை கண்காணிக்க ஜி.பி.எஸ்., கருவி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது. இவற்றை நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது. பெரும்பாலான ரேஷன் கடைகளை, கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மை சங்கங்களின் கிடங்குகளுக்கு, ரேஷன் பொருட்கள் அனுப்பப்படுகின்றன. அங்கிருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு, கடைகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.இது தவிர, வாணிப கழக கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு நேரடியாகவும் அனுப்பப்படுகின்றன.ரேஷன் பொருட்களை கடையில் இறக்கும் போது, ஒரு மூட்டைக்கு 2 - 3 கிலோ வரை குறைவாக இருப்பதாக, ரேஷன் ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.எனவே, ரேஷன் பொருட்கள் பாதுகாப்பாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு, அவற்றை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், ஜி.பி.எஸ்., என்ற வாகன நகர்வு கண்காணிப்பு கருவிகள் பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, முதன்மை சங்கங்களுக்கு, கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஜி.பி.எஸ்., கருவி பொருத்துவதால், வாகனங்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் செல்வதை கண்காணிக்க முடியும். வாகனங்கள் செல்லும் நேரமும் அறிய முடியும். அனுமதித்த நேரத்தை விட தாமதமானால், அதற்கான காரணம் கேட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.எனவே, வாகனங்கள் கணக்கெடுக்கப்பட்டு, ஜூன் இறுதிக்குள் கருவிகள் பொருத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

வியாஸ்
மே 25, 2024 11:47

அந்த கருவியையே ஆட்டைய போட்டுட்டு கொள்ளையஇப்பாங்க. அப்ப என்ன செய்வீங்க? அப்போ என்ன செய்வீங்க? திருடுதல் மக்களின் ரத்தத்திலேயே இருக்கு.


Rajasekar Jayaraman
மே 25, 2024 10:44

ஏமாற்று பேர்வழிகள் தலைமை தாங்கும் வரை தமிழகம் உருப்படாது.


Suresh sridharan
மே 25, 2024 08:01

இதற்கு விடை கிடங்கிலே தொடங்குகிறது சோதிப்பதற்காக ஒரு பைப்பை வைத்து சொருகி எடுக்கும் உணவுப்பொருள் அரிசி கோதுமை சர்க்கரை ஒவ்வொரு முறையும் 50 100 கிராம் ஒவ்வொரு எடுக்கிறார்கள் பிறகு எப்படி குறையாமல் இருக்கும்


Kasimani Baskaran
மே 25, 2024 07:39

சில கிலோ மட்டுமே ஆவியாவதை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டியது இல்லை - ஆனால் மொத்தமாக அடுத்த மாநிலத்துக்கு மாட்டுத்தீவனமாக அனுப்புவதை கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும்.


rama adhavan
மே 25, 2024 01:55

இருபத்து மணி நேரமும் கேமரா வைத்துக்கொண்டு கண்காணிக்கப் பட வேண்டியது ரேஷன் கடைகளின் உள்ளும் புறமும் மட்டுமே, ஆமாம் காவல் துறை அலுவலர்களைக் கொண்டு விஜிலேன்ஸ் இருக்கிறதே என்ன செய்கிறது?


Siva
மே 25, 2024 07:40

கமிஷன் மற்றும் ஊழல் தொழில் ஒன்று என்றால் அது ரேஷன் கடைகளில். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளில் பார்க்க வேண்டும் வாழ்க ஊழல் வளர்க ஊழல் வாதி தக்காளி


S. Gopalakrishnan
மே 25, 2024 07:45

காவல் துறை விஜிலென்ஸ் அதிகாரிகள் குண்டர் சட்டத்தை விடவும் வேறு என்ன கொடிய சட்டத்தை சவுக்கு சங்கர் மீது பாய்ச்சலாம் என்று அல்லும் பகலும் மூளையை கசக்கிக் கொண்டு இருக்கிறார்கள் !


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை