உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமராவதி அணையில் நீருக்கு பதில் மண் தேக்கம்!

அமராவதி அணையில் நீருக்கு பதில் மண் தேக்கம்!

உடுமலை : அமராவதி அணை துார்வாரப்பட்டு, பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என, தமிழக அரசு அறிவித்து மூன்று ஆண்டாகியும் பணிகள் துவங்கவில்லை. நடப்பாண்டு அணை நீர் மட்டம் சரிந்துள்ள நிலையில், துார்வார வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை, 1958ல் கட்டபட்டு, 1959ல் பயனுக்கு வந்தது. 4 டி.எம்.சி., கொள்ளளவும், ஆண்டுக்கு, 10 டி.எம்.சி., நீர் பாசனத்திற்கு பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதோடு, ஆற்றின் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரமாகவும் உள்ளது.அணை பயனுக்கு வந்து, 65 ஆண்டுகளாக துார்வாரப்படாததால், நீர் தேங்கும் பரப்பளவில் வண்டல் மண் படிந்துள்ளது. மொத்தமுள்ள, 90 அடி உயரமுள்ள அணையில், 4,047 மில்லியன் கனஅடி நீர் தேக்க முடியும். அணையில், 20 சதவீதம் வரை, மண் பரப்பாக மாறியுள்ளது.இதனால், அணை மொத்த கொள்ளளவில், 800 மில்லியன் கனஅடி வரை நீர் தேக்க முடியாமல், வீணாக வெளியேற்றும் நிலை உள்ளது.பருவமழை காலத்தில் அணை நிரம்பி, பல டி.எம்.சி., நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. கோடை காலம் மற்றும் பாசன தேவைக்கு முழுமையாக நீர் வழங்க முடியாத சூழல் உள்ளது. பயிர் சாகுபடியும், பாசன காலமும் குறைந்து, பாசன நிலங்கள் தரிசாக மாறி வருகிறது.

பட்ஜெட் அறிவிப்பு

இந்நிலையில், அணையில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை துார்வாரவும், முழு கொள்ளளவுக்கு நீர் தேக்க வேண்டும், என, விவசாயிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். கடந்த, 2021 ஆக.,ல், தமிழக அரசு பட்ஜெட்டில், மேட்டூர், வைகை, அமராவதி உள்ளிட்ட அணைகள் துார்வாரப்பட்டு, பழைய கொள்ளளவு நிலைக்கு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.அறிவிப்பு வெளியாகி மூன்று ஆண்டாகியும், இத்திட்டம் நடைமுறைக்கு வராமல் உள்ளது. அமராவதி பாசனம் முழுமையாக பாதிக்கப்படுவதோடு, கோடை காலங்களில் வழியோர கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது.

பாசன மண் வளமாகும்

விவசாயிகள் கூறியதாவது:அணையை துார்வாரினால், கூடுதல் நீர் சேமிக்க முடியும். ரசாயன உரங்கள் பயன்பாட்டால், விவசாய நிலங்களில் மண் வளம் குறைந்துள்ளன. அணையின் வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துக்கொள்ள அனுமதியளித்தால், அணையும் ஆழமாகும்; விளை நிலங்களும் வளமாகும்.அதேபோல், பெரும்பாலான பகுதிகளில், மணல் குவிந்துள்ளது. இவற்றால், அரசுக்கு வருவாய் கிடைக்கும்.நீர் வளத்துறை, வனத்துறை, வருவாய்த்துறை இணைத்து, அணை துார்வாரும் பணியை துவக்க, ஒரே உத்தரவாக வெளியிட்டு, உடனடியாக செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

அரசுக்கு அறிக்கை

அதிகாரிகள் கூறுகையில், 'அணை நீர் தேங்கும் பரப்பில், வனத்துறைக்கு சொந்தமான நிலமும் உள்ளதால், அனுமதி பெற வேண்டும். இதற்கு, 1.5 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்ற வனத்துறையின் பல்வேறு நிபர்ந்தனைகளால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.தற்போது, 39.67 அடி நீர் மட்டம் இருந்தாலும், அதில், 20 அடி வரை வண்டல் மண் மட்டுமே உள்ளது. நீர் மட்டம் குறைந்துள்ளதால், துார்வாருவது குறித்து அரசுக்கு அறிக்கை அனுப்பி உள்ளோம்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Mani . V
மே 06, 2024 04:37

ஸ்டாலின் மனதுக்குள்: "அப்பாடா மணலை அள்ளி கர்நாடகா அணை கட்டுவதற்கு அனுப்பி வைத்து விடலாம்"


Venkatesan Srinivasan
மே 06, 2024 00:30

சிறந்த தொழில் நுட்பம் கையாளும் அரசு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களை தூர்வார அனுமதிக்க வேண்டும் செலவை ஈடுகட்ட வருவாய் ஈட்டுதல் என்ற அடிப்படையில் அத்தகைய நிறுவனங்களுக்கு எத்தகைய அரசு துறைகள், அரசியல் கட்சிகள் குறுக்கீடு அற்ற பணி சூழலை உருவாக்கிட வேண்டும் படிமங்களில் உள்ள உயிரி சத்து, மணல் தனித்தனியாக பிரித்து சந்தைப்படுத்தல் மூலம் அந்த நிறுவனங்கள் செலவை ஈடுகட்ட வருவாய் ஈட்ட அனுமதிக்கலாம் பணி முழுமையாக நிறைவு பெறுவதை உறுதி செய்ய கால நிர்ணயம் மற்றும் செயல் அளவு அடிப்படையில் அணையிலிருந்து வண்டல் நீக்கம் நடைபெற வேண்டும் நல்ல பல திட்டங்கள் முழுமையாக நடைபெறாமல் போவதற்கு காரணம் அரசு துறைகளின் சிவப்பு நாடா அணுகுமுறையே வண்டல் எடுக்கும் வேலைக்கு வனத்துறை, நீர்வளத்துறை, வருவாய்த்துறை என மூன்று துறைகள் தலையீடு இருந்தால் அவற்றிற்குள் கருத்தொற்றுமை வருவதற்குள் மழை பெய்து மீண்டும் அணை நிரம்பிட வாய்ப்பு உள்ளது ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் கட்டி நீர் கொள்ளளவு பெருக்க ஆற்றின் பாதையில் படிந்து இருக்கும் மணல் அப்புறப்படுத்த வேண்டும் இலக்கு தடுப்பணை என உறுதி செய்தால், மூலதனம் மணல் சந்தைப்படுத்தல் வருவாய் என கொண்டால் திட்டம் எளிதாக நிறைவேறும் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே


Syed ghouse basha
மே 05, 2024 20:38

இது போன்ற வறண்ட அணைகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையி தூர்வாரப்படவேண்டும் தமிழக அரசு செய்யுமா


அப்புசாமி
மே 05, 2024 17:05

முசிறி, குளித்தலை மணல் அள்றவங்களுக்குச் சொல்லுங்க.


Ramesh Sargam
மே 05, 2024 12:20

அணையில் இருக்கும் மண்ணைவிட, ஆட்சியாளர்கள் தலையில் உள்ள மூலையில் மண் அதிகம் அணை மண்ணாவது பயன் ஆட்சியாளர்கள் தலையில் உள்ள மூலையில் உள்ள மண் எதற்கும் பயன்படாது


ஆரூர் ரங்
மே 05, 2024 11:43

மேட்டூரில் (முப்பது டிஎம்சி கூடுதலாக தேக்க)தூர்வார 3900 கோடி செலவாகும் என்று கமிட்டி அறிக்கை கொடுத்து ஐந்தாண்டுகள் ஆகின்றன..விடியல் அரசு சமாதி மணி மண்டபங்கள் கட்டுவதில் பிசி.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 05, 2024 09:15

அமராவதி மணலில் தங்கம் இருக்கிறது என்று யாராவது ஒரு புரளியை கிளப்பி விடுங்கள் ஒரே மாதத்தில் அணையே காணாமல் போய்விடும் அளவுக்கு கழக கண்மணிகள் வாரிவிடுவார்கள்


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 05, 2024 09:13

ஐ மண்ணா மன்னா, உடனே ஆணையிடுங்கள் லண்டனில் இருந்து ஓடோடி வந்து கமிஷன் அடித்து விடுகிறேன் ஏய் யாரங்கே? முரசு ஒலிக்கட்டும் லாரிகள் தயாராகட்டும் கமிஷன் ஏஜென்டுகள் புற்றீசல் போல புறப்படட்டும் வருவாய் நமக்கே கமிஷன் நமக்கே ஹா ஹ ஹ ஹா


குமரன்
மே 05, 2024 08:58

அணையில் தேங்கிய மண்ணை விவசாயப்பகுதியில் கொட்டினால் மகசூல் இரட்டிப்பாகும் அதைவிடுத்து செங்கல் சூலைக்கு அரசு அனுமதிக்க கூடாது மாநிலம் முழுவதும் விவசாயத்தை விடவும் சூலைக்கு எடுக்கும் மண்ணே அதிகம் அரசும் அதிகாரியும் தயவுசெய்து இதைத்தடுத்து விவசாயத்தை செழிப்புறச்செய்யுங்கள் உங்களுக்கு புண்ணியமாகும்


pandit
மே 05, 2024 08:24

மணல் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டம் வேலூருக்கு பண மழை


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை