உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விரைவில் மாணவருக்கு ரூ.1000; போதையையும் கட்டுப்படுத்தணும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

விரைவில் மாணவருக்கு ரூ.1000; போதையையும் கட்டுப்படுத்தணும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

சென்னை : “தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இதற்காக பெரும் இயக்கத்தை துவக்க இருக்கிறோம். வருவாய் துறையில் பொதுமக்கள் சான்றிதழ் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவதில், கலெக்டர்கள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்,” என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.சென்னை தலைமைச் செயலகத்தில், கலெக்டர்கள் ஆய்வுக் கூட்டம், நேற்று துவங்கியது. முதல் நாளில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 14 மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கோடைக் காலத்தில், குடிநீர் பிரச்னை, மின்வெட்டு ஏற்படாமல் செயல்பட்டதற்கு நன்றி. அடுத்து வரும் நாட்களில், இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளோம். புதுமைப்பெண் திட்டம் போல், மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும், 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் துவக்கப்பட உள்ளது.வரும் இரண்டு ஆண்டுகள், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும், மிக முக்கியமான ஆண்டுகள். புதிய உத்வேகத்துடன், மக்கள் நலப்பணிகளை மிக சிறப்பாக செய்ய வேண்டும்.மக்களுடன் முதல்வர் திட்டம், அடுத்த மாதம் 15ம் தேதி முதல், செப்., 15 வரை, ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. 'உங்களைத் தேடி உங்கள் ஊரில், நீங்கள் நலமா' போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.வருவாய் துறையில், பட்டா மாறுதல், சான்றிதழ் பெறுவதில், பொதுமக்கள் அடையும் சிரமங்கள் உள்ளிட்ட பிரச்னைகள், அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. கலெக்டர்கள் அனைவரும் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். 'கலைஞர் கனவு இல்லம்' திட்டம், 2.50 லட்சம் தொகுப்பு வீடுகளை புனரமைக்கும் திட்டம் ஆகியவற்றில், தனிக்கவனம் செலுத்துங்கள்.அனைத்து பள்ளிக் குழந்தைகளும், கல்லுாரியில் சேர்ந்து படிக்கும் வகையில், 'கல்லுாரி கனவு, உயர்வுக்கு படி' போன்ற திட்டங்களை, ஆர்வத்துடன், முனைப்புடன் செயல்படுத்த வேண்டும். மழைக் காலங்களில், இயற்கை இடர்பாடுகள் காரணமாக பணிகள் தாமதப்படக்கூடும் என்பதால், மாவட்டங்களில் நடந்து வரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்தமிழகத்தில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை, பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். அது போதாது. போதைப் பொருள் நடமாட்டம் என்பது, சட்டம் - ஒழுங்கு பிரச்னை மட்டுமல்ல; சமூக ஒழுங்கு பிரச்னை. எனவே, தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க பெரும் இயக்கத்தை துவக்க உள்ளோம்.கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை, நகராட்சி துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து, போதைப் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க, அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில், தனிக்கவனம் செலுத்த வேண்டும்.போதைப் பொருட்கள் நடமாட்டம் அறவே இல்லை; முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும். மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்க்க வேண்டும். இவ்வாறு, முதல்வர் பேசினார்.கூட்டத்தில், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, ஒவ்வொரு மாவட்டத்திலும், அரசு திட்டங்கள் செயல்பாடு எந்த வகையில் உள்ளது என, ஆய்வு செய்து அறிவுரைகள் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

sankaranarayanan
ஜூன் 12, 2024 23:03

மாணவர்களுக்கு கருணைத்தொகை என்று இப்படி கொடுத்து அவர்களை இப்போதே கட்சியின் பக்கம் சாய்வதற்கு எதுவாக செய்யும் இந்த சூதாட்டம் அரசியல் நீடிக்காது அவர்களுக்கு தரமான கல்வியை கொடுத்தலே அவர்கள் மற்ற மாணர்வர்களுடன் படிப்பில் போட்டியிட்டு முதலில் வருவதற்கு ஏதுவாகும் இது தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பதற்கே சமம். க்ளிவே இலவசமாக கொடுக்கோம்போது மாதம் ரூபாய் ஆயிரம் அவர்களுக்கு எதற்கு? இதை நடுத்தரகர்கள் நன்றாக பயன் படுத்த்ர்த்திக்கொள்வார்கள்


R.MURALIKRISHNAN
ஜூன் 12, 2024 19:09

தமிழ்நாட்டின் தலைவிதி. மாணவர்களுக்கு பணம் தேவையில்லை பணம் சம்பாதிக்க உதவும் தொழில் கல்வி தான் தேவை.


Sree
ஜூன் 12, 2024 18:47

இவர்களே விற்பார்களாம் இவர்களே தடுப்பார்களாம்


I am fool - Stalin
ஜூன் 12, 2024 17:54

இந்த விஷயம் ஸ்டாலினுக்கு தெரியுமா?


என்றும் இந்தியன்
ஜூன் 12, 2024 16:31

அப்போ மாணவர்கள் மாதத்திற்கு வெறும் ரூ 1000 தான் போதை பொருளுக்கு செலவு செய்யவேண்டும் என்று பச்சையாக சொல்வது போல தெரிகின்றது, இப்படித்தானே பெண்களுக்கு கொடுக்கும் அந்த பணம் டாஸ்மாக் சரக்குக்கு தான் செல்கின்றது.


Rajarajan
ஜூன் 12, 2024 16:01

அதாவது, ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும். இதெல்லாம் தொழில் நேக்கு.


Gopi
ஜூன் 12, 2024 15:47

1000 கொடுத்தா அதையும் அதுக்கு சிலர் யூஸ் பண்ணிட்டா? நீங்க மகளிருக்கு கொடுக்குற 1000 அவர்களுக்குத்தான் போகுதான்னு தெரியுமா? இல்ல வீட்டுல வாசிக்கிறவங்க போக்குவரத்து செலவுக்கு போச்சா


Shunmugham Selavali
ஜூன் 12, 2024 14:22

டாஸ்மாக் சாராயம் போதைப்பொருளா? ஊட்டச்சத்தா? மது விலக்கை அமுல்படுத்தினால் மிகமிக நல்லது.


Jaihind
ஜூன் 12, 2024 14:17

1000 ரூபாய் எதுக்கு , கல்லூரி மாணவர்களுக்கு பாக்கெட் மநீயா ? இது போதை பழக்கத்தை கட்டுப்படுத்தாது , அதை அதிகரிக்கும் வேலை .....


karthik
ஜூன் 12, 2024 13:45

அது எப்படி பங்கு.. தேர்தல் நெருங்கும் பொது... ஓசி எல்லாம் அள்ளி விடுற? உனக்கு என்ன இருக்க காசை எல்லாம் ஓசி குடுத்து நாட்டை சீரழிச்சிட்டு போவ.. மக்கள் பாவம் தன் தலையில் தான் விடியும் என்று அறியாமலே உனக்கு ஒட்டு போடுகிறார்கள்..


மேலும் செய்திகள்











புதிய வீடியோ