உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஊரக வளர்ச்சித்துறைக்கு மாறுகிறார் ககன்தீப் சிங் பேடி; 18 ஐ.ஏ.எஸ்., உயர் அதிகாரிகள் மாற்றம்

ஊரக வளர்ச்சித்துறைக்கு மாறுகிறார் ககன்தீப் சிங் பேடி; 18 ஐ.ஏ.எஸ்., உயர் அதிகாரிகள் மாற்றம்

சென்னை: தமிழகத்தில் 18 உயர் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: * வனத்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுப்ரியா சாகு, மருத்துவத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடி

* மருத்துவ துறை செயலராக இருந்த மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ககன்தீப் சிங் பேடி, ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.* சுற்றுலா மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக சந்திரமோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். * நீர்வளத்துறை செயலாளராக இருந்த சந்தீப் சக்சேனா செய்தி மற்றும் அச்சு காகிதத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.* நீர்வளத்துறை கூடுதல் செயலாளராக மணிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். * பொதுப்பணித்துறை கூடுதல் செயலாளராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி மங்கத் ராம் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.* சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், வனத்துறை முதன்மைச் செயலாளராக செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.* சமூக பாதுகாப்பு திட்ட இயக்குநராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜான் லூயிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். * நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் உயர்கல்வித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். * அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மேலாண்மை இயக்குநராக ஆர்.வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ்.,நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் செயலாளராக செல்வராஜூவும், இந்திய மருத்துவ துறை செயலாளராக விஜயலட்சுமியும், வரலாற்று ஆய்வுத்துறை செயலாளராக வெங்கடாசலமும், நிலச்சீர்திருத்தம் துறை செயலாளராக ஹரிஹரனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். போக்குவரத்து துறை செயலாளராக லில்லியும், உப்புக்கழக தலைவராக மகேஸ்வரனும், சமூக சீர்திருத்தத்துறை செயலாளராக ஜவஹரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mani . V
ஜூலை 02, 2024 04:50

இந்த இடமாற்ற கருமாந்திரம் ஒன்றுதான் ஒழுங்காக நடந்து கொண்டு இருக்கிறது.


Suriyanarayanan
ஜூலை 01, 2024 17:58

மாற்றம் அரசியலில் இருந்து தொடங்கினால் மாற்றம் மகிழ்ச்சியை தரும் 2026ல் ❤️❤️


enkeyem
ஜூலை 01, 2024 15:12

தமிழக அரசு இந்த அதிகாரிகளை மாற்றும் வேலையை மட்டும் ஜரூராக செய்கிறது


duruvasar
ஜூலை 01, 2024 14:51

இந்த சர்தார்ஜி முதல்வர் வண்டியின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு மேயர் பிரியாவுடன் பயணித்த காட்சி மறக்கமுடியாத ஒன்று. ஊரக வளர்ச்சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார் டிராக்டரில் தொங்கிக்கொண்டு போவார் என நம்பலாம்.


அப்புசாமி
ஜூலை 01, 2024 14:16

மூலமே கோணல். இதில் அதிகாரிங்களை மாத்தினா சரியாயிடும்னு கனவு வேற.


s sambath kumar
ஜூலை 01, 2024 13:41

ஷோ காண்பிக்குறானுங்க நாங்களும் இருக்கோம்னு .


ديفيد رافائيل
ஜூலை 01, 2024 14:56

இது எட்பவுமே தெரிஞ்சது தானே


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை