மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தங்கச்சிமடம் பகுதிகளிலிருந்து வரத்து குறைந்துள்ளதாலும், தொடர் முகூர்த்தநாட்கள் காரணமாகவும் மல்லிகை பூ விலை அதிகரித்து கிலோ ரூ.2000க்கு விற்கப்படுகிறது.ராமேஸ்வரம் செல்லும் வழியில் தங்கச்சிமடம், மண்டபம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மல்லிகை நாற்றுகள் உற்பத்தி செய்து விற்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இங்கு வளரும் மல்லிகைப் பூ மணம் மிகுதியாக உள்ளதால் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், மாநிலங்களுக்கும் இந்த நாற்றுகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.மல்லிகை பங்குனி, சித்திரை சீசன் காலத்தில் கிலோ ரூ.300 முதல் ரூ.400க்கு விற்கப்படுகிறது. சீசன் இல்லாத நேரத்தில் கிலோ ரூ.1500 முதல் ரூ.2000த்திற்கும் மேல் விற்கப்படுகிறது. தற்போது மாறி பலத்த காற்று, மழை, வெயில் போன்ற பருவகால மாற்றத்தால் இப்பகுதிகளிலிருந்து மல்லிகைப்பூ வரத்து குறைந்துள்ளது.மேலும் பக்ரீத், தொடர் முகூர்த்த நாட்கள் மற்றும் வெளியூர்களில் இருந்தும் வரத்து குறைந்துள்ளதாலும் கடந்த மாதம் கிலோ ரூ.400க்கு விற்ற மல்லிகை பூ விலை அதிகரித்து கிலோ ரூ.2000 வரை உயர்ந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
2 hour(s) ago