உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்னிக்கு முன்னரே வாட்டும் வெயில் வறட்சியின் பிடியில் 22 அணைகள்

அக்னிக்கு முன்னரே வாட்டும் வெயில் வறட்சியின் பிடியில் 22 அணைகள்

சென்னை:அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு முன்பே, கோடை வெயில் கொளுத்துவதன் காரணமாக, 24 அணைகள் வறண்டு விட்டன.நீர்வளத்துறை பராமரிப்பில் பல்வேறு மாவட்டங்களில், 90 அணைகள் உள்ளன. இவற்றின் வாயிலாக பாசனம், குடிநீர், தொழிற்சாலைகளின் நீர்தேவை பூர்த்தியாகி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அணைகள், வனவிலங்குகள் மற்றும் பறவைகளின் நீராதாரமாகவும் உள்ளன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி., ஆகும். தற்போது, 90 அணைகளிலும் சேர்த்து 68.1 டி.எம்.சி., நீர் இருப்பு உள்ளது. அதிகபட்சமாக, சேலம் - மேட்டூர் அணையில், 29.9 டி.எம்.சி., ஈரோடு - பவானிசாகரில் 5.27 டி.எம்.சி., தேனி - வைகை அணையில், 4.08 டி.எம்.சி.,யும் இருப்பு உள்ளது.கள்ளக்குறிச்சி - கோமுகி, மணிமுக்தாநதி; கடலுார் - வீராணம்; தர்மபுரி - தொப்பையாறு, வாணியாறு; கிருஷ்ணகிரி - சூளகிரி சின்னாறு; தென்காசி - கடநதி, குண்டாறு; திருநெல்வேலி - வடக்கு பச்சையாறு; திண்டுக்கல் - சிறுமலையாறு ஓடை; கோவை - சோலையாறு, அப்பர் நீராறு; ஈரோடு - நொய்யல் ஒரத்துபாளையம், பெரும்பள்ளம் ஆகிய அணைகள் வறண்டு கிடக்கின்றன. இதேபோல, கரூர் - நொய்யல் ஆத்துப்பள்ளம்; திருப்பூர் - உப்பாறு, வட்டமலைக்கரை ஓடை, நல்லதங்காள் ஓடை; அரியலுார் - சித்தாமல்லி; கரூர் - பொன்னணியாறு; சேலம் - ஆணைமடுவு; திருச்சி உப்பாறு ஆகியவையும் வறண்டு கிடக்கின்றன.சதவீத அடிப்படையில், 30.4 சதவீதம் மட்டுமே அணைகளில் நீர்இருப்பு உள்ளது. சேறு, சகதி, வண்டல் மண்டல் படிவு உள்ளிட்டவற்றை கணக்கிடும் போது, அதைவிட குறைந்த சதவீதத்திலேயே நீர் இருப்பு இருக்க வாய்ப்புள்ளது.அக்னி நட்சத்திர வெயில் துவங்குவதற்கு முன்னரே, பல அணைகள் வேகமாக வறண்டு வருவதால், குடிநீர் தட்டுப்பாடு தலைதுாக்கும் வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி