உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 234 தொகுதிக்கும் மகளிரணி செயலர்: பா.ம.க., முடிவு

234 தொகுதிக்கும் மகளிரணி செயலர்: பா.ம.க., முடிவு

சென்னை, : பா.ம.க.,வை பலப்படுத்த, சட்டசபை தேர்தலுக்குள் 234 தொகுதிகளுக்கும் மகளிரணி செயலர் நியமிக்கப்படுவர் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.பா.ம.க.,வின் கள செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தலா ஒரு தொகுதி செயலர், தலைவர் நியமிக்கப்படுவர் என, கடந்த 5ம் தேதி அறிவித்திருந்தார். தொகுதி செயலர், தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட ஏழு குழுக்கள், தமிழகம் முழுதும் பயணம் செய்து வருகின்றன.இந்நிலையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், மகளிரணி செயலர், தலைவரை நியமிக்க வேண்டும் என்று, ராமதாஸ் தற்போது கூறியுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர், பல்வேறு சமூகத்தினருக்கும் வாய்ப்பளித்து மகளிரணி செயலர் மற்றும் தலைவரை தேர்வு செய்வர் என ராமதாஸ் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை