உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அரசு திட்டத்தில் 25 பேருக்கு வேலை

அரசு திட்டத்தில் 25 பேருக்கு வேலை

சென்னை:தமிழக முதல்வரின் புத்தாய்வு திட்டத்தில் பணிபுரிய, 25 நபர்கள் தேவை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு, 65,000 ரூபாய் சம்பளம், 10,000 ரூபாய் படி வழங்கப்படும். தொழிற்கல்வி படிப்புகளில் இளங்கலை பட்டத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது கலை அறிவியலில் முதுகலை பட்டத்தில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழி பயன்பாட்டு திறன் கட்டாயம். இதற்கு, வரும் 6ம் தேதி முதல், www.tn.gov.in/tncmfp, www.bim.edu/tncmfp என்ற இணையதளங்கள் வழியே விண்ணப்பிக்கலாம். இதற்கு வரும் 26ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை