மேலும் செய்திகள்
அமலாக்கத்துறை நோட்டீசை எதிர்த்த அமைச்சரின் வழக்கு தள்ளுபடி
2 hour(s) ago | 2
தோட்டக்கலை துறை போராட்டம் வாபஸ்
4 hour(s) ago
ஆவண எழுத்தர் உதவியின்றி நேரடியாக பத்திரம் பதியலாம்
4 hour(s) ago
சென்னை:போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிக்கை: கொரோனா காலத்தில் புதிய பஸ்கள் வாங்காததால், வயது முதிர்ந்த பஸ்களின் எண்ணிக்கையும், அவற்றின் ஆயுட்காலமும் உயர்ந்து விட்டது. கே.எப்.டபிள்யூ., ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் வாயிலாக, 2,213 டீசல் மற்றும் 500 மின்சார பஸ்கள் வாங்குவது தொடர்பான வழக்கில், நீதிமன்ற அறிவுரை பெற்று, பஸ் கொள்முதல் கூண்டு கட்டும் நிலையிலும், ஒப்பந்த நிலையிலும் உள்ளது. தி.மு.க., அரசு நான்கு ஆண்டுகளில், 29,502.70 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், 7,682 புதிய பஸ்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையில் இயங்கும் 1,000 மின்சார பஸ்கள் என மொத்தம் 8,682 புதிய பஸ்கள், 1,500 பஸ்கள் கூண்டு கட்டி புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 791 புதிய பஸ்களும், 858 புதுப்பிக்கப்பட்ட பஸ்களும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நடப்பு 2024 -- 25ம் ஆண்டு இறுதிக்குள் அனைத்து பஸ்களும் பயன்பாட்டுக்கு வரும் வகையில், ஒவ்வொரு மாதமும் 300க்கும் அதிகமான புதிய பஸ்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து கொண்டு உள்ளது. பெண்களுக்கான கட்டணமில்லா பயணத் திட்டத்தின் கீழ் பெண்கள் 473.61 கோடி முறையும், 28.62 லட்சம் முறை திருநங்கைகளும், மாற்றுத்திறனாளிகள் அவர்களது உதவியாளர்கள் 3.78 கோடி முறையும் பயணம் மேற்கொண்டுஉள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
2 hour(s) ago | 2
4 hour(s) ago
4 hour(s) ago