உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நளினிக்கு "ஏ பிரிவு வசதி

நளினிக்கு "ஏ பிரிவு வசதி

வேலூர்: வேலூர் பெண்கள் சிறையில், நளினிக்கு 'ஏ' பிரிவு வசதி செய்யப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்தாண்டு ஏப்., 20ம் தேதி, நளினி அறையில் மொபைல்போனை, சிறைக் காவலர்கள் கைப்பற்றினர். இதையடுத்து, நளினி சென்னை புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். நிர்வாக வசதிக்காக, நேற்று முன்தினம், புழல் சிறையிலிருந்து வேலூர் பெண்கள் சிறைக்கு மாற்றப்பட்டார். நளினிக்கு, 'ஏ' பிரிவு வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக, சிறைத் துறையினர் கூறினர். தினம் படிக்க நாளிதழ், வானொலி மற்றும் மின் விசிறி வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி