உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கணவரை வழியனுப்பி திரும்பிய போது விபத்து மனைவி, 2 மகன்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி

கணவரை வழியனுப்பி திரும்பிய போது விபத்து மனைவி, 2 மகன்கள் உட்பட 4 பேர் பரிதாப பலி

மதுராந்தகம்:கணவரை வெளிநாட்டிற்கு வழியனுப்பி விட்டு, வீடு திரும்பிய போது நடந்த கோர விபத்தில், மனைவி, இரு மகன்கள் மற்றும் டிரைவர் என, நான்கு பேர் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.கடலுார் மாவட்டம் மேல்பட்டம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் ஷமீது, 50. இவரது மனைவி ஜெய்நிஷா பேகம், 42. மகன்கள், மிஷால், 20, பைசல், 14, அப்ஜல் அலி, 16.

விசா கிடைத்தது

சவூதி அரேபியாவில் பணிபுரிய அப்துல் ஷமீதுக்கு, சமீபத்தில் விசா கிடைத்தது. இதையடுத்து, அப்துல் ஷமீதுவை வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க, அவரது குடும்பத்தினர் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தனர்.அப்துல் ஷமீதுவை வழியனுப்பிய பின், 'மாருதி பிரீஸா' காரில், கடலுாருக்கு மீண்டும் திரும்பினர். காரை சரவணன், 45, என்பவர் ஓட்டினார். நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த சிலாவட்டம் அருகே கார் சென்ற போது, சென்னையில் இருந்து கேரளாவுக்கு, இரும்பு கம்பிகள் ஏற்றிச் சென்ற லாரியின் பின்னால் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில், ஜெய்நிஷா பேகம், மகன்கள் மிஷால், பைசல், கார் டிரைவர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பலியாகினர். அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் கொடுத்த தகவலின்படி, சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், விபத்துக்குள்ளான காரில் கிடந்த நான்கு சடலங்களையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டிரைவர் தலைமறைவு

பலத்த காயம் அடைந்த சிறுவன் அப்ஜல் அலி, சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், ஜெய்நிஷா பேகத்தின் அண்ணன் முகமது ஷாலிக், 67, அளித்த புகாரில் வழக்கு பதிந்த மதுராந்தகம் போலீசார், தலைமறைவான லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

JOHN CHANDRASEKAR
மே 23, 2024 10:29

மாருதி ஸ்விப்ட், breeza போன்ற கார்கள் வேகமாக போகும் கார்கள் ஆனால் பாதுகாப்பு ரோம்ப குறைவு இந்தியாவில அதிக கார் விபத்துகள் தமிழ் நாட்டுல நடக்குது அதுவும் மாருதி ஸ்விப்ட் கார்கள் அதிகம்


விழியப்பன்
மே 17, 2024 20:41

வெகுநிச்சயமாக, பெருந்துயரான செய்தி தான் அனைவரின் ஆன்மாவும் சாந்தியடைய வேண்டுகிறேன் பல கனவுகளுடன், எல்லோரையும் விட்டு வெளிநாடு சென்ற அந்த மாமனிதருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள் இருப்பினும், இந்த தருணத்தில் இந்த தகவலைப் பகிர விரும்புகிறேன் Maruti Brezza, Hyundai Venue, Hyundai Creta, மற்றும் இம்மாதிரி மகிழ்வுந்துகளை ஓட்டுவோர், அவ்வாகனங்களில் இருக்கும் குறைந்த Safety Feautres ஐ மறந்து கண்மூடித்தனமான வேகத்தில் செல்வது கண்டித்தக்கது


Rajinikanth
மே 16, 2024 21:09

இவர்கள் போய் வேகமா லாரி பின்னால் முட்டினால் லாரி டிரைவர் என்ன செய்வார்?


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ