உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆடுகள் திருடிய வழக்கில் பெண்கள் உட்பட 4 பேர் கைது

ஆடுகள் திருடிய வழக்கில் பெண்கள் உட்பட 4 பேர் கைது

முதுகுளத்துார் : ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட பொசுக்குடி, கேளல், வெங்கலக்குறிச்சி உட்பட பல்வேறு கிராமங்களில் கடந்த சில நாட்களாக ஆடுகள் திருட்டு நடந்தது.கீழத்துாவல் போலீசார் விசாரித்து வந்தனர். முதுகுளத்துார்--பரமக்குடி சாலை சாம்பக்குளம் அருகே கீழத்துாவல் எஸ்.ஐ., பிரவின் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில்​ ஈடுபட்டனர். அவ்வழியே வந்த இரண்டு டூவீலரில் சோதனை செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.கீழத்துாவல் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரித்த போது எமனேஸ்வரத்தை சேர்ந்த முனியசாமி 25, மனைவி புவனேஸ்வரி 23, பரமக்குடி குமரேசன் 40, சத்யா 40, ஆகிய நான்கு பேர் பல்வேறு இடங்களில் ஆடுகள் திருடியது தெரிய வந்தது. 4 பேரை கைது செய்து இரண்டு ஆடுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை