உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 40,000 மாணவர்கள் ஆப்சென்ட்; வீடுதேடி சென்று விசாரிக்க உத்தரவு

40,000 மாணவர்கள் ஆப்சென்ட்; வீடுதேடி சென்று விசாரிக்க உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகளில், 'ஆப்சென்ட்' ஆன, 40,000 மாணவர்களை, வீடு தேடிச் சென்று பேசி, துணை தேர்வில் பங்கேற்க வைக்க வைக்கும்படி, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.தமிழக அரசு பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுக்கான, விடைத்தாள் மதிப்பீடு நடந்து முடிந்துள்ளது. வரும், 6ம் தேதி பிளஸ் 2வுக்கும், 10ம் தேதி - 10ம் வகுப்புக்கும், 14ம் தேதி - பிளஸ் 1க்கும் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.இந்த தேர்வுகளில், பிளஸ் 2வில், 12,000 பேர், பிளஸ் 1ல், 9,500 பேர், 10ம் வகுப்பில், 17,000 பேர் தேர்வில் பங்கேற்காமல், 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இந்த மாணவர்கள் படிப்பை கைவிட்டு விடாத வகையில், அவர்களை துணை தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டுமென, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.தேர்வு முடிவுகள் வெளியானதும், துணை தேர்வு தேதி அறிவிக்கப் படும்.ஏற்கனவே நடந்த தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களும், பங்கேற்காத மாணவர்களும், இந்த துணை தேர்வில் பங்கேற்று, அடுத்து உயர்கல்வியில் சேர வழி வகை செய்ய வேண்டும்.இதற்காக, மாணவர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களின் பெற்றோரை சந்தித்து, உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Lion Drsekar
மே 02, 2024 19:20

அத்தனை பெரும் தேர்வு எழுதவில்லை என்றாலும் வலுவில் அழைத்து அவர்கள் தேர்ச்சி ஏற்றதாக சான்றிதழ் வழங்கும் வரை இது ஓயாது மீண்டும் மீண்டும் சொல்கிறேன் , யார் வேண்டுமானாலும் எந்த விடைத்தாள்களை பள்ளிகளாகட்டும் , பல்கலைக்ககாகங்களாகட்டும் , ஆய்வுக்கு உட்படுத்தினால் எலலா உண்மைகளும் வெளிவரும், , எல்லாமே நாடகம் மறைமுக நடைபெற்று வரும் இந்த நாடகம் எல்லோருக்கும் தெரியும் எல்லா நிலைகளிலும் மயான அமைதி நிலவும்போது நாம் உண்மையைக் கூறுவது தவறுதான் எந்த ஆட்சியாக இருந்தாலும், எந்த தேர்வாக இருந்தாலும் எல்லாமே நாடகம் , பொய், இவர்கள் கைகளில்தான் வருங்காலம் இருக்கிறது வந்தே மாதரம்


premprakash
மே 02, 2024 16:14

அவர்களுக்கு படிப்பு பிடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு Vocational / கை தொழில் சம்மந்த பட்ட படிப்பை சொல்லி தரலாம்


J.V. Iyer
மே 02, 2024 13:50

என்ன காரணம்? போதைப்பொருள் மலிவாக கிடைக்கிறது டாஸ்மாக் இவர்களுக்காக எப்போதும் திறந்திருக்கிறது எப்போதும் செல்போனை நோண்டிக்கொண்டிருக்க ஆண் நண்பர்கள், கம்பனி கொடுக்க பெண்தோழிகள், என்று சொர்க்கத்தில் மிதந்துகொண்டு இருக்கிறார்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் இவர்களை ஒன்றும் சொல்லமுடியாது, செய்யமுடியாது அப்புறம் என்ன குஜால்தான் இருளாக மாணவர்களுக்கு


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 02, 2024 13:06

ஆசிரியரிடம் போதை வஸ்து கொடுத்து அனுப்பி அந்த அந்த மாணவர்களுக்கு கொடுத்து நல்ல முறையில் பஞ்சாயத்து பேசி பரிட்சைக்கு அழைத்து வந்து கேள்வித்தாளோடு பதிலையும் கொடுத்து அதை எழுத ஒரு பிராக்சியை நியமித்து கொடுக்கவும்


தமிழ்வேள்
மே 02, 2024 12:57

, போலி மாணவர்கள் அட்டவணைப்படிதான் , மத்திய உணவு ,காலை உணவு , முட்டை , செருப்பு , புத்தக பொதி , மற்ற மானியங்கள் என்று ஒதுக்கி கொள்ளையடிக்க படுகிறது தேர்வுகள் என்று வரும் பொது பல்லிளித்து மாட்டிக்கொள்கிறது மானியங்களை விழுங்கி ஏப்பம் விட மாணவர்கள் பட்டியல் இல்லாத மாணவர்களை எப்படி தேர்வுகளுக்கு முன்னிலைப்படுத்துவது திமுக உ பி க்களுக்கு வேஷம் போட்டா கூட்டிவர முடியும் ? சிக்கிக்கொள்ளும் இடம் இதுதான் வேறு வழியின்றி ஆசிரியர் சமுதாயமும் இதற்க்கு உடந்தை


Ramesh Sargam
மே 02, 2024 12:39

சரக்கு அடிக்கவும், போதைப்பொருள் பயன்படுத்தவும் சென்றிருப்பார்கள், தேர்வுக்கு செல்லாமல் இப்பவாவது மக்கள் திமுகவின் ஆட்சி லட்சணத்தை புரிந்துகொள்ளவேண்டும் திமுகவை ஒழிக்க முயலவேண்டும்


jayvee
மே 02, 2024 11:40

மாணவர்களின் பெற்றோர்களுக்கு counselling வழங்கவேண்டும் பொருளாதார அடிப்படையில் படிப்பை தொடரையலாத மாணவர்களுக்கு ஜாதி மதம் பாராமல் கல்விக்கான பண மற்றும் பொருள் உதவி உடனடியாக செய்யப்படவேண்டும் உறைவிடம் உட்பட


ramesh
மே 02, 2024 11:32

தமிழ், அரசியலுக்கும் படிப்புக்கும் என்ன சம்பந்தம் ஒழுங்காக படிக்காததால் பரீட்சை எழுதாதவர்களை மீண்டும் பரிசை எழுத வைக்க முயற்சிப்பது நல்ல விஷயம் தானே எதற்கு எடுத்தாலும் அரசியல் பேசுகிறேன் என்று உச்சம் தலைக்கும் உள்ளங்காலுக்கும் முடிச்சி போடக்கூடாது


Ganapathy Subramanian
மே 02, 2024 11:03

திராவிடியாஸ் மாடலில் இதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது


தமிழ்வேள்
மே 02, 2024 10:54

அந்த நாற்பது ஆயிரமும் போலி மாணவர் சேர்க்கையாக இருந்தால், வீடு வீடாக என்ன, மாநிலம் முழுவதும் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள் அடுத்த திருட்டு திராவிட மாடல் மாஸ்ட்டர் ரோல் ஊழல் போல அப்பனுக்கும் புள்ளைக்கும் டிசைன் டிசைன் ஆக ஊழல் செய்யவில்லை என்றால், ஆத்மா சாந்தி அடையாது போல


ramesh
மே 02, 2024 11:35

முதலில் போலி மாணவர்களை சான்றிதழ் இல்லாமல் பள்ளிக்கூடத்தில் எப்படி சேர்க்க முடியும் இதுகூட தெரியாமல் அரசியல் சார்ந்த கருத்து வேறு


மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி