உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது

தமிழகத்தில் 5 லட்சம் பேருக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுதும், 18 வயதுக்கு மேலானவர்களில், எழுத, படிக்க தெரியாதவர்கள் குறித்து, பள்ளிக்கல்வித்துறை கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. இதில், 5 லட்சம் பேருக்கு, 'அ, ஆ' போன்ற தமிழ் எழுத்துகள் கூட தெரியவில்லை.முறைசாரா கல்வி இயக்குனரகம் சார்பில், கிராமங்கள், நகரங்களில் எழுத்தறிவு பெறாதவர் விபரம் சேகரிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கணக்கெடுப்பு

கடந்த கல்வியாண்டில், எழுத்தறிவு பெறாமல் உள்ள, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் குறித்து, அனைத்து மாவட்டங்களிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதில், 'அ, ஆ' என்ற தமிழ் எழுத்துகள் கூட எழுத, படிக்க தெரியாத நிலையில், 5 லட்சம் பேர் இருப்பது தெரியவந்துஉள்ளது. சென்னையில், 11,869 பேர் தமிழ் எழுத்துகள் தெரியாமல் உள்ளனர். அதிகபட்சமாக, சேலம் மாவட்டத்தில், 40,191 பேர் தமிழ் தெரியாமல் உள்ளனர்; அவர்களில், 29,176 பெண்கள்.முதல் 10 மாவட்டங்களில், கிருஷ்ணகிரி, 33,020; மதுரை, 23,640; திருவண்ணாமலை, 23,423; கள்ளக்குறிச்சி, 21,857; ஈரோடு, 20,279; தர்மபுரி, 19,983; கோவை, 18,725; திண்டுக்கல், 18,500; விழுப்புரம், 16,744 பேர், தமிழ் எழுத, படிக்க தெரியாமல் உள்ளனர். இவர்களில், 18 வயது பூர்த்தியான இளைஞர், இளம்பெண்களும் உள்ளனர்.

2,797 பேர்

இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் மிகக் குறைந்த அளவில், 2,797 பேர் உள்ளனர். கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புக்குப் பின், 4.80 லட்சம் பேரும் தமிழ் எழுத, படிக்க பயிற்சி அளிக்கப்பட்டுஉள்ளது.இன்னும், 2 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களையும் முழுமையான எழுத்தறிவு பெற்ற மாவட்டங்களாக மாற்ற, விரைவில் சிறப்புத் திட்டம் அறிவிக்கப்படும் என, முறைசாரா கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

venugopal s
ஜூன் 08, 2024 16:47

ஏழு கோடி மக்கள் தொகை உள்ள தமிழகத்தில் ஐந்து லட்சம் பேருக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியாது என்பது அதிகம் இல்லை, அது ஒரு சதவீதத்துக்கும் குறைவு தான் என்பது அரைகுறையாகப் படித்தவர்களுக்கு புரியாது!


Ram pollachi
ஜூன் 08, 2024 15:31

சத்துணவு அமைப்பாளர்களை வைத்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டதா? தமிழ் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு மாதம் ரூ.1,000/- வழங்கப்படும் என்று ஒரு அறிவிப்பை விட்டால் இந்த எண்ணிக்கை பலமடங்கு உயரும்.


ஆரூர் ரங்
ஜூன் 08, 2024 12:27

டிகிரி படித்த ஒரு தலைவரே பார்த்து தமிழ் படிக்கத் திணறுகிறார். சாதாரண ஏழைகள் என்ன செய்வர்?


சதீஷ். கடலூர்
ஜூன் 08, 2024 10:03

திராவிட மாடல்


தேவாஜீ
ஜூன் 08, 2024 09:33

எல்லோரும் இங்கிலீஷ் மீடியத்தில் பி.ஏ, எம்.ஏ படிச்சவங்க. தப்பா புரிஞ்சிக்காதீங்க. தமிழ் படிச்சா இருகுற பிழைப்பும் நாறிடும்.


Muthukumarkmd Muthukumar
ஜூன் 08, 2024 08:41

THE GRADUATES AND POST GRADUATES OF THE UNIVERSITY OF LIFE EAGERLY LEARNING ALPHABETS FOR KNOWING MORE ABOUT THE UNIVERSE GOOD MORNING TO YOU.


kannan sundaresan
ஜூன் 08, 2024 07:03

கல்வி சிறந் தமிழ்நாட்டின் இன்றைய நிலை


Kasimani Baskaran
ஜூன் 08, 2024 06:38

தமிழ் தேர்வு எழுதாமல் தப்பியோடிவர்களில் ஒருவர் கூட மனிதரில்லை போல தெரிகிறது.


Mani . V
ஜூன் 08, 2024 05:40

இதைப் பெருமையாகச் சொல்கிறீர்களா? என்னமோ அந்த ஈரவெங்காயம் வந்த பிறகுதான் தமிழக பெண்களே கல்வியறிவு பெற்றார்கள் என்று கம்பு சுற்றும் கூட்டம் எல்லாம் எங்கே போனது?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ