வேப்பூரில் கல்வித்துறை மாநாடு 5 அமைச்சர்கள் பங்கேற்பு
கடலுார் : கடலூர் மாவட்டம், வேப்பூர் திருப்பயரில், பள்ளிக்கல்வித்துறை, தமிழ்நாடு பெற்றோர், ஆசிரியர் கழகம் சார்பில் 'பெற்றோர்களை கொண்டாடுவோம்' மாநாடு நடந்தது.கல்வி அமைச்சர் மகேஷ் வரவேற்றார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், கணேசன், பொன்முடி, சிவசங்கர் முன்னிலை வகித்தனர். விஷ்ணுபிரசாத் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் ராதாகிருஷ்ணன், ராஜேந்திரன், அய்யப்பன், பெற்றோர் ஆசிரியர் கழக மாநில துணைத் தலைவர் முத்துக்குமார், பாடநுால் கழக தலைவர் லியோனி, அரசு முதன்மை செயலர் சந்திரமோகன், மேலாண் இயக்குநர் சங்கர், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கூடுதல் கலெக்டர் சரண்யா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், சிதம்பரம் சேர்மன் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.