உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் 5 நாள்! தபால் துறையில் 44,228 காலியிடம்; பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதி

இன்னும் 5 நாள்! தபால் துறையில் 44,228 காலியிடம்; பத்தாம் வகுப்பு மட்டுமே கல்வித்தகுதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தபால் அதிகாரி மற்றும் உதவி தபால் அதிகாரியாக பணியாற்ற, பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வாய்ப்பு; நாடு முழுவதும் 44,228 காலியிடங்கள் உள்ளன; தமிழகத்தில் மட்டும் 3,789 காலியிடங்கள் உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,5ம் தேதி.தபால் துறையில் 44,228 பேருக்கு தபால் அதிகாரி (போஸ்ட் மாஸ்டர்), உதவி தபால் அதிகாரி பணி காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான கல்வித்தகுதி, பத்தாம் வகுப்பு மட்டுமே. விண்ணப்பதாரர்களுக்கு கம்ப்யூட்டர் கையாளும் திறன் மற்றும் சைக்கிள் ஓட்ட தெரிந்து இருக்க வேண்டும். தமிழகத்தில் மட்டும் 3,789 காலி பணியிடங்கள் உள்ளன. அனைத்து மாவட்டங்களிலும் காலி பணியிடங்கள் உள்ளன. மண்டலம் வாரியாக தெரிந்து கொள்ள https://indiapostgdsonline.cept.gov.in/HomePageS/D19.aspx என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.

மாநிலங்கள்- காலி பணியிடங்கள்

ஆந்திரா- 1355 கேரளா- 2,433கர்நாடகா- 1940

வயது

விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இன்னும் 5 நாட்கள் தான் உள்ளது. வரும் ஆகஸ்ட் 5ம் தேதி அப்ளே செய்ய கடைசி நாள் ஆகும்.

விண்ணப்பிக்க கட்டணம்

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.100. பழங்குடியின மற்றும் பட்டியலின பிரிவினர், மகளிர் ஆகியோர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆப்லைன் அல்லது ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Sekar
ஜூலை 31, 2024 22:44

The applicants must clearly understand that the GDSs are not regular employees of the Department and their emoluments, allowances and other entitlements are not at par with the Central Government employees


Krishnamoorthi Krishnamoorthi
ஜூலை 31, 2024 18:10

Nalla vaaippu than


sundarsvpr
ஜூலை 31, 2024 17:28

வசதி படைத்தவர்களும் பொருளாதார வேலைக்கு வர விரும்புகிறார்கள். வேறு வேலைக்கு சென்றிட வாய்ப்பு உள்ளவர்களும் விண்ணப்பித்து தவறு. அரசு புரிந்துகொள்ளவேண்டும். வேலை கிடைப்பதால் பொருளாதார வசதியற்ற குடும்பங்கள் மன மகிழ்ச்சி அடையும் என்றால் அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும். இதற்கு செல்வந்தர்கள் ஆதரவு தருவார்கள் ஆனால் அரசியல்வாதிகள் ஏன் இதனை ஆதரிக்கவில்லை என்பது தான் கேள்வி?


P. VENKATESH RAJA
ஜூலை 31, 2024 14:21

அருமையான வாய்ப்பு பயன்படுத்தி கொள்ள வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை