உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 55% கூடுதலாக பெய்தது தென்மேற்கு பருவமழை

55% கூடுதலாக பெய்தது தென்மேற்கு பருவமழை

சென்னை: இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தென்மேற்கு பருவமழை ஜூன், ஜூலை மாதங்களில் இயல்பை விட 55 சதவீதம் அதிகமாக பெய்து உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கை:மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் இன்று(ஜூலை 30) இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த நிலை ஆகஸ்ட் 4ம் தேதி வரை தொடரலாம்.

மேகமூட்டம்

சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம். மத்திய மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளதால், மீனவர்கள் இங்கு செல்ல வேண்டாம்.

நெல்லையில் கூடுதல்

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 32.80 செ.மீ., மழை பெய்யும். இந்தாண்டு தென்மேற்கு பருவமழை துவங்கிய ஜூன் 1 முதல், ஜூலை 29 வரையிலான காலகட்டத்தில், தமிழகம், புதுச்சேரியில் இயல்பை விட, 55 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. அதாவது, இந்த இரு மாதங்களில் வழக்கமாக, 11.5 செ.மீ., மழை பெய்ய வேண்டிய நிலையில், 17.9 செ.மீ., பெய்துள்ளது. அதேநேரத்தில், திருநெல்வேலி மாவட்டத்தில் 21.6 செ.மீ., மழை பெய்துள்ளது. இது, இயல்பு அளவான 3.8 செ.மீ.,யை விட, 4.58 சதவீதம் அதிகம். அரியலுார், கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், பெரம்பலுார், திருவாரூர், துாத்துக்குடி மாவட்டங்களில், இயல்பை விட குறைந்த அளவில் மழை பெய்துள்ளது. இவை தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், இயல்பை விட அதிக அளவில் மழை பெய்துள்ளது. சென்னை, நீலகிரி, ராணிப்பேட்டை, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர் மாவட்டங்களில், 100 சதவீதத்துக்கு அதிகமாக மழை பெய்துஉள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
ஜூலை 30, 2024 16:31

என்ன, அதிக மழை பொழிந்து வீடுகளில் தண்ணீர், தெருவில் வெள்ளம், என்று கடலுக்குப் போகும் இயர்கையிடம் வஞ்சகம் இல்லை. 'வரலாறு காணாத மழை, நூறாண்டு காணாத மழை' என்று ஏதோ தங்கள் சாதனை போல அறிக்கை விட்டுவிட்டு, வெள்ள நிவாரண நிதி, அதில் அமுக்கல் என்றுதான் போகும் இதில் எத்தனை பெய்தால் என்ன என்ற விரக்தி தான் மிஞ்சுகிறது


sundarsvpr
ஜூலை 30, 2024 10:58

மழை நீர் வீணாக கடலில் கலக்கக்கூடாது. அதற்கு தீர்வு காணாமல் மாநிலம் இடையே நீர் தாவா. மேக தாது அனுமதிக்க ஒத்துக்கொண்டால் காவிரி நீர் கடலில் கலப்பது கணிசமாக குறையும். ஆனால் கர்னாடக அரசுக்கு தாராள மனம் இல்லை. எனவே தமிழகம் தயங்குகிறது. தமிழகமும் பாண்டிச்சேரி அரசுகள் இணைந்து ஏன் அணை கட்ட யோசிக்கக்கூடாது?


Lion Drsekar
ஜூலை 30, 2024 09:36

இயற்கை அன்னைக்கு தெரிகிறது ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை மற்றும் ஏனைய உயிரினங்களும் பெருகுகின்றன , ஆகவே அவைகளுக்கும் சேர்த்து மழை பொழிகிறது . ஆனால் முறையாக திட்டம் வகுத்து மழைநீரை சேர்க்கும் பணியில் மனிதன் முயற்சித்திருந்தால் கடல்நீருடன் சேருவதை தவிர்த்திருக்கலாம் . வந்தேமாதரம்


VENKATASUBRAMANIAN
ஜூலை 30, 2024 08:19

என்ன பிரயோசனம். எல்லாம் கடலில் கலக்கிறது. இரண்டு கழகங்களும் இதற்கு என்ன தீர்வு


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி