உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னையின் 3 தொகுதிகளிலும் 56.10 சதவீதமே ஓட்டுப்பதிவு; முந்தைய தேர்தலைவிட 4 சதவீதம் சரிவு

சென்னையின் 3 தொகுதிகளிலும் 56.10 சதவீதமே ஓட்டுப்பதிவு; முந்தைய தேர்தலைவிட 4 சதவீதம் சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையின் மூன்று லோக்சபா தொகுதிகளில் 68.14 சதவீதம் ஓட்டுப்பதிவானதாக, மாநில தேர்தல் கமிஷன் நேற்று முன்தினம் அறிவித்த நிலையில், 56.10 சதவீத ஓட்டுகளே பதிவானதாக திருத்தப்பட்டு நேற்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. முந்தைய தேர்தலைவிட 4 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளது. மாவட்ட அளவிலான ஓட்டுப்பதிவில் தொடர்ந்து பின்தங்கிய புதிய சாதனையையும் தலைநகர் சென்னை பிடித்துள்ளது.சென்னை மாவட்டத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., - நா.த.க., உட்பட 107 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.

இத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு, நேற்று முன்தினம் காலை 7:00 மணி துவங்கி, மாலை 6:00 மணியுடன் நிறைவடைந்தது. சில இடங்களில் 'டோக்கன்' வழங்கப்பட்டு, நேரம் கடந்தும் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டது.இந்த தேர்தலுக்கு சென்னையில் 48.69 லட்சம் வாக்காளர்கள் ஓட்டளிக்க தகுதி உடையவர்களாக, தேர்தல் கமிஷன் அறிவித்தது. இவர்களில் 40 சதவீதம் பேரின் ஓட்டுகள் பதிவாகாததால், சென்னையின் ஓட்டுப்பதிவு 56.10 சதவீதமாக பதிவாகி உள்ளது. தேர்தல் அறிவிப்பு நாளில் இருந்து, தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டாலும், ஓட்டுப்பதிவு நாள் வரை, பல இடங்களில் குளறுபடி, குழப்பமே நிலவியது.பெரும்பாக்கத்தில் ஒரே இடத்தில் 32,000 பேருக்கு ஓட்டுகள் இல்லாதது, வாக்காளர் பட்டியலில் லட்சக்கணக்கானோரின் பெயர் விடுபட்டது, 'பூத் சிலிப்' வழங்குவது உள்ளிட்ட பணிகளில், தேர்தல் அலுவலர்கள் அலட்சியமாகவே இருந்தனர்.தவிர, வழக்கமாக செயல்படும் ஓட்டுச்சாவடிகளை இடமாற்றியது, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் கோளாறு, பட்டியலில் பெயர் இல்லாதது போன்ற காரணங்களாலும், ஓட்டளிக்க ஆர்வமாக வந்த பலரும், ஓட்டளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.இதனால், பல இடங்களில் தேர்தல் அலுவலர்கள், வாக்காளர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தவிர, பெரும்பாலான இடங்களில் சில மணி நேரத்திற்கு ஓட்டளிக்க யாரும் வராத சூழலும் நிலவியது. மதியத்திற்கு மேல் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பானது.இந்நிலையில், சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும், மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும் முரண்பாடாக இருந்தது. இதனால், நேற்று முன்தினம் மாலை 3:00 மணியளவில் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், ஓட்டுப்பதிவு விபரங்களை வெளியிடுவதை நிறுத்திக்கொண்டனர்.அதேநேரம், மாநில தேர்தல் கமிஷன் வாயிலாக வெளியிடப்பட்ட பட்டியலில் சென்னை மாவட்டத்தில், 68.14 சதவீதம் ஓட்டுப்பதிவாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.அதன்பின், சென்னை மாவட்டத்தில் பதிவான முழுமையான ஓட்டுப்பதிவு சதவீதத்தை, மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் நேற்று வெளியிட்டுள்ளனர்.அதில், வடசென்னையில் 60.13 சதவீதம், தென்சென்னையில் 54.27 சதவீதம், மத்திய சென்னையில் 53.91 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளது தெரியவந்துள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தில் இந்த தேர்தலில் 56.10 சதவீத ஓட்டுகளே பதிவாகியுள்ளன.கடந்த லோக்சபா தேர்தலைவிட 4 சதவீத ஓட்டுகள் குறைந்து பதிவாகி, மாநில அளவில், ஓட்டுப்பதிவில் சென்னை தொடர்ந்து பின்தங்கியுள்ளது என்ற சாதனையையும் பிடித்துள்ளது.சட்டசபை தொகுதி வாரியாக, முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்துாரில் 56.46 சதவீதம், அமைச்சர் உதயநிதி தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் 54.03 சதவீதம், அமைச்சர் சேகர்பாபு தொகுதியான துறைமுகத்தில் 53.18 சதவீதம், அமைச்சர் சுப்பிரமணியன் தொகுதியான சைதாப்பேட்டையில் 53.25 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில் 66.75 சதவீத ஓட்டுப்பதிவும், குறைந்தபட்சமாக ஆயிரம்விளக்கு சட்டசபை தொகுதியில் 52.04 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன.இந்நிலையில், ஓட்டுப்பதிவான இயந்திரங்கள், அண்ணா பல்கலை, ராணிமேரி கல்லுாரி, லயோலா கல்லுாரி வளாகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கு 'சீல்' வைக்கும் நடைமுறையை, மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.பின், மாவட்ட தேர்தல் அலுவலர் ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி:சென்னை மாவட்டத்தில் அலுவலர்கள், போலீசார், தன்னார்வலர்கள் என, 40,000க்கும் மேற்பட்டோர், இரவு, பகல் பாராமல் பணியாற்றினர். அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.சென்னை மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மூன்று இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. தேர்தல் பொது பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில், அவற்றுக்கு 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில், 188 கண்காணிப்பு கேமராக்கள் வாயிலாக, தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.நான்கடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, 1,095 போலீசார், மூன்று சுழற்சி முறைகளில், 24 மணி நேரமும் கண்காணிக்கின்றனர். இந்த மூன்று வளாகங்களும், ஜூன் 6ம் தேதி வரை, தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் தான் இருக்கும்.சென்னை மாவட்டத்தில் 56.10 சதவீத ஓட்டுப்பதிவாகி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை விட, 4 சதவீதம் குறைந்துள்ளது. தேர்தல் ஆணையம் மேற்கொண்ட பல்வேறு விழிப்புணர்வுகளால், இந்த அளவுக்கு ஓட்டுபதிவாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

60.21 சதவீதம்

ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க., வேட்பாளர் பிரேம்குமார், த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பிரபாகரன் உள்ளிட்ட 31 பேர் போட்டியிட்டனர். இத்தொகுதியில், 60.21 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த லோக்சபா தேர்தலை விட, இந்த தேர்தலில் 2.06 சதவீதம் குறைவாக ஓட்டு பதிவாகி உள்ளது. மொத்த வாக்காளர்களில், 9 லட்சத்து 46 ஆயிரத்து 94 பேர் இந்த தேர்தலில் ஓட்டளிக்கவில்லை.சட்டசபை தொகுதி வாரியாக, மதுரவாயலில் 57.83 சதவீதம், அம்பத்துாரில் 60.37, ஆலந்துாரில் 57.81, ஸ்ரீபெரும்புதுாரில் 70.54, பல்லாவரத்தில் 57.09, தாம்பரத்தில் 58.34, சதவீத ஓட்டு பதிவாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

அப்புசாமி
ஏப் 21, 2024 19:36

எல்லோரும் ஒட்டுப்.போட சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. எங்க ஊரில் செத்தவங்களுக்கு பூத் ஸ்லிப் ரெடியா இருக்கு. உயிரோட இருக்குறவனுக்கு மூணு இடத்தில் ஓட்டுரிமை இருக்கு. எல்லாம் சாஹுவின் கைங்கரியம்.


Anbuselvan
ஏப் 21, 2024 14:22

அதெப்படி தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முன்னதாக அதிக சதவிகிதத்தை அறிவித்து பிறகு குறைத்து விட்டார் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலாக, அதாவது நான் தேர்தலில் இருந்து பார்த்து கொண்டு வருகிறேன் மாலை ஆறு மணி அளவில் ஒரு சதவிகிதமும் பிறவு முடிவாக ஒரு வோட்டு சதவிகிதமும் தலைமை தேர்தல் அதிகாரி சொல்லுவார் முடிவு சதவிகிதம் எப்போதுமே ஒன்று அல்லது ரெண்டு சதவிகிதம் கூடத்தான் இருக்கும் இந்த தேர்தலில் தான் முதல் முதலாக தமிழக தேர்தல் வரலாற்றில் குறைத்து சொல்லி இருக்கிறார்கள் இதில் உள்குத்து நிச்சயம் இருக்கும் எனதான் தோன்றுகிறது தேர்தல் நியாயமாக நடந்ததா என நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கு நடத்துமா?


Saai Sundharamurthy AVK
ஏப் 21, 2024 11:07

தமிழக தேர்தல் ஆணையம் மற்றும் அதன் ஊழியர்கள் எல்லோருமே திமுகவின் கைப்பாவைகளாக செயல் பட்டிருக்கின்றனர். ஒவ்வொரு வாக்குசாவடியிலும் யார் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டார்களோ அவர்களின் பெயர்களை தெரிந்தே அல்லது வேண்டுமென்றே பட்டியலில் இருந்து நீக்கியிருக்கின்றனர். இந்த அழகில் மக்கள் மீதே தேர்தல் ஆணையம் குற்றம் சாட்டுகிறது. பட்டியலை முழுமையாக தயாரிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல், திமுகவினர் பல வாக்கு சாவடிகளில் மாலை 4 மணிக்கு மேல் கள்ள வோட்டு போட்டிருக்கின்றனர். இது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளத்தில் காணப்படுகின்றன. இந்த விஷயத்திலும் தமிழக தேர்தல் ஆணையம் கண்டும் காணாமல் இருக்கிறது. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் திமுக இது போன்ற பிழைப்பை தான் நடத்துகிறார்கள் என்பது புரிகிறது.


Lion Drsekar
ஏப் 21, 2024 10:28

இதற்க்கு காரணம் எல்லோருக்குமே எந்த கட்சியின் மீதும் நம்பிக்கை இல்லாமல் போனது , மக்களின் குரல் எங்குமே எதிரொலிக்கவில்லை மாறாக ஜாதி, மதம் மொழி , இன வெறிப்பேச்சுதான் அதிகம் , அரசியல் ஆட்சியினர் என்ற போர்வையில் சுடுகாட்டைத் தவிர எல்லா துறைகளும் ஒரு குடும்ப சொத்தாகிவிட்டது , மீடியா, பத்திரிக்கை இப்படி ருந்தால் எங்கிருந்து உண்மையான எய்திகள் மக்களை சென்றடையும் ? உண்மையை சொல்லவேண்டுமானால் எல்லா நிலைகளிலும் யாருக்குமே ஏன் வாழ்கிறோம் என்ற விசனத்துடன் வாழ்ந்து கொண்டு வருகின்றனர் வந்தே மாதரம்


R C MOHAN
ஏப் 21, 2024 11:31

அதெல்லாம் காரணம் இல்லை. படித்து நல்லா சம்பாதிக்கிற ஒரு கூட்டத்திர்கு யார் வந்தாலும் கவலைப்படலை. இப்போதைய வாழ்க்கை எப்போதும் அப்படியே இருக்குமென்று கனவு காண்கிறாற்கள். அவர்களுக்கு நாட்டைப்பற்றி எந்த கவலையுமில்லை. தவிற மூன்று நாள் விடுமுறை


Bharathi
ஏப் 21, 2024 10:10

தேர்தல் பணிகள்ல வேலை செய்யறதெல்லாம் லோக்கல் அரசாங்க ஊழியர்கள் தான் அவங்க எப்பவுமே திமுக ஆதரவாதான் செயல்படுவாங்க ஒட்டு பதிவு அதிகமா நடந்தாலோ படித்தவர்கள் அதிக அளவுல ஒட்டுபதிவு செஞ்ச அவங்களுக்கு பாதகமா இருக்கும்னு நல்லா தெரிஞ்சே வேலை பார்த்திருக்காங்க


Bharathi
ஏப் 21, 2024 10:06

ஓட்டுக்கு காசு வாங்கறாங்கன்னு குறை சொல்றோம் ஆனா அவங்க தான் வாங்கன காசுக்கு நன்றி மறக்காம வெயில் பார்க்காம போய் ஒட்டு போடறாங்க ஆனா நல்லா சம்பளம் வாங்கிகிட்டு சொகுசு வாழ்க்கை வாழ்த்துகிட்டு மேதாவிகள் போல கமெண்ட் போடறவங்க ஒட்டு போடறதில்ல அதனால தான் தீயமுக போன்ற கார்பொரேட் குடும்ப கட்சியெல்லாம் ஜெயிக்குது


நலம் விரும்பாத நாட்டாமை
ஏப் 21, 2024 09:26

இதெல்லாம் நல்லதுக்கு இல்ல சாமி. தேர்தலுக்குன்னு ஒரு மதிப்பு மரியாதை இருக்கு. அதை பத்தின அருமை தெரியாம இருக்கிறதால் தான் ஓட்டு சதவிகிதம் குறைஞ்சிருக்கு.கடமையை செய்யாம இருக்கிறத்துக்கு பல பேரு ஆயிரத்தெட்டு காரணம் சொல்லிக்கலாம். இலவசம்னா வெயில் மழை பார்க்காமல் பல பேரு வரிசையில் நிற்ப்பாங்க ஓட்டு போட வரிசையில நிற்க்க யோசிக்கிற ஜனங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. ஓட்டு சதவிகிதம் குறைஞ்சதால நம்ம நாட்டாமை கோபத்துல சொன்ன தீர்ப்பு இது:- 75,% கீழ் ஓட்டு குறைஞ்ச தொகுதில ஒரு வாரம் மின்சாரம் நிப்பாட்டனும் 50% கீழ் ஓட்டு குறைஞ்ச தொகுதில ஒரு மாசம் மின்சாரம் நிப்பாட்டனும். இது நாட்டாமையோட தீர்ப்பு.


Gokul Krishnan
ஏப் 21, 2024 09:13

எவ்வளவு குறைவான வாக்கு பதிவு என்றாலும் சென்னைக்கு மட்டுமே எல்லா வசதிகளும் வேலை வாய்ப்பும் செய்து தருவோம் தர்மபுரி மக்களுக்கு குறைந்த பட்சம் சென்னைக்கு நேரடி இரயில் வசதி கூட செய்ய பார்லிமென்டில் குரல் கொடுக்க மாட்டோம்


Kasimani Baskaran
ஏப் 21, 2024 09:04

எத்தனை ஓட்டுக்கள் பதிவாகின என்பதைக்கூட ஊகத்தின் அடிப்படையில் சொன்னதெல்லாம் ரொம்பவே ஓவர் கூடுதலாக குறிப்பிட்ட நபர்களின் வாக்குகளை நீக்குவதெல்லாம் கேவலமான திருட்டு மாடலின் வியூகங்கள் நீதிமன்றம் செல்வது அவசியம்


venugopal s
ஏப் 21, 2024 08:54

தமிழக எம் பி க்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய விடாது மத்திய பாஜக அரசு என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்! அதனால் தான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதில் தமிழக மக்களுக்கு ஆர்வம் இல்லை !


Saai Sundharamurthy AVK
ஏப் 21, 2024 11:04

சரி, திமுகவுக்கு வாக்களிக்க வேண்டியது தானே ! ஏன் அதை மட்டும் செய்யவில்லை ??


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை