உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒகேனக்கல்லில் 57,000 கன அடி நீர்வரத்து; 6வது நாளாக பரிசல் இயக்க தடை

ஒகேனக்கல்லில் 57,000 கன அடி நீர்வரத்து; 6வது நாளாக பரிசல் இயக்க தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒகேனக்கல்: கர்நாடக, கேரளா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான மைசூர், மாண்டியா, குடகு, ஹாசன், வயநாடு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரத்தால், கர்நாடகாவிலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.இந்நிலையில், நேற்று, கபினி அணையிலிருந்து வினாடிக்கு, 35,000 கன அடி, கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து, 50,000 கன அடி என, இரண்டு அணைகளில் இருந்தும் மொத்தம், 85,000 கன அடி உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 70,000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, 57,000 கன அடியாக குறைந்தது. அதிக நீர்வரத்தால் ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மெயின் அருவி, மெயின் பால்ஸ், ஐந்தருவி, ஐவர்பாணி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், தர்மபுரி கலெக்டர் சாந்தி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.தொடர்ந்து ஆறாவது நாளாக காவிரியாற்றில் குளிக்க, பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகத்தின் தடை தொடர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Lion Drsekar
ஜூலை 22, 2024 15:35

வரும் தண்ணீரின் நிலை என்ன ? அவைகள் சேமிக்க அல்லது பயன்படுத்தி விவசாயத்தை பெருக்கினால் நன்றாக இருக்கும், வந்தே மாதரம்


Tiruchanur
ஜூலை 22, 2024 11:45

தண்ணி கூட கர்நாடகால மழை பெய்ஞ்சாதான் நமக்கு வரும். சுயசார்பா எப்போ நாமளே இன்னும் நிறைய ஏரி, குளங்களை வெட்டப்போறோம், மேட்டூர் அணையை தூர் வார போறோம்?


மேலும் செய்திகள்